நீ தனியாக இல்லை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ தனியாக இல்லை!

இன்று 27வது சங்கீதத்தின் தொடரின் மூன்றாவது நாளில் உள்ளோம். 3வது வசனம் யுத்தம் மற்றும் சத்துருவின் இராணுவத்தைப் பற்றியது…

“எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது, என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்”. (வேதாகமம், சங்கீதம் 27:3)

2 இராஜாக்கள் 6வது வசனத்தில், சீரிய இராணுவம் இஸ்ரேலின் நகரங்களில் ஒன்றில் முகாமிட்டிருந்த ஒரு நாளின் கதையை வேதாகமம் நமக்குக் கூறுகிறது. தீர்க்கதரிசி எலிசா நகரத்தில் இருந்தான், அவனுடைய வேலைக்காரன் மிகவும் பயந்திருந்தான். எலிசா அவனை இவ்வாறு ஊக்குவித்தான், “‘பயப்படாதே, அவர்களுடன் இருப்பவர்களை விட நம்முடன் இருப்பவர்கள் அதிகம்’ என்று கூறினான். மேலும் எலிசா ஜெபித்து, ‘கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.‘” (2 இராஜாக்கள் 6:16-17) உன்னைச் சுற்றி ராணுவம் முகாமிட்டால் எப்படி பயமின்றி இருக்க முடியும்? உனக்கு எதிராக இருப்பவர்களை விட உன்னுடன் இருப்பவர் பெரியவர் என்பதை உணர்ந்து கொள்! ஆண்டவர் உன் கண்களைத் திறக்கும்படி ஜெபிப்பதன் மூலம், நீ அவருடைய கிருபையாலும் அன்பாலும் சூழப்பட்டிருப்பதை உணரலாம். கர்த்தருடைய தூதர்கள் கூட இரட்சிப்பைச் சுதந்தரிப்பவர்களின் சேவையில் இருக்கிறார்கள் என்பதை வேதாகமம் கூறுகிறது. அது நீ தான் – அவர்கள் உனக்கு சேவை செய்ய இருக்கிறார்கள்! (எபிரேயர் 1:14)

உன் இருதயம் கலங்க வேண்டாம். ஆண்டவரில் விசுவாசம் கொண்டிரு! முழு நம்பிக்கையுடன் இரு. இயேசு கூறியிருக்கிறார், “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்…”(வேதாகமம், மாற்கு 13:7)

ஆண்டவர் உன்னுடனே இருக்கிறார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!