நீ ஜெபிக்கும்போது நேரத்தை இழக்கிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஜெபிக்கும்போது நேரத்தை இழக்கிறாயா?

அது எனது விடுமுறையின் கடைசி நாளாக இருந்தது, எனது இன்பாக்ஸில் இத்தனை நாட்களாய் என்ன செய்திகள் வந்திருக்கின்றன என்று பார்க்கத் துவங்கினேன். நான் அப்படிச் செய்திருக்கவே கூடாது, ஏனென்றால் அவ்வளவு மின்னஞ்சல்கள் எனக்காக காத்திருந்தது.

“இன்று இதை முற்றிலுமாய் வாசித்து பதிலளிக்க வாய்ப்பே இல்லை” என்று நினைத்துக்கொண்டு, என் மனதில் உடனடியாகத் திட்டமிடத் தொடங்கினேன். அதன் பிறகு, என்னால் அந்த நாளை சந்தோஷமாக அனுபவிக்க முடியவில்லை, ஆனால் அதிர்ஷ்டவசமாக, எனது மின்னஞ்சலை மட்டுமல்ல, நான் எனது ஆவிக்குரிய தியான புத்தகத்தையும் திறந்து வாசித்தேன். அதில், அந்த நாளுக்கான பக்கத்தில், “கர்த்தரைத் தேடுங்கள். அப்பொழுது பிழைப்பீர்கள்…” என்று எழுதியிருந்தது! (ஆமோஸ் 5:6).

உன் பல பணிகளுக்கு மத்தியில் உதவிக்காக நீ ஏங்குகிறாயா? நீயும் உன் அன்றாட வாழ்வில், எல்லாவற்றையும் செய்து முடித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், அலுவல் மிகுதியால் ஒவ்வொரு நாளும் வேகமாக ஓடிக்கொண்டிராமல், அனுதின வாழ்வில் சமாதானத்தை அனுபவிக்க ஏங்குகிறாயா?

இந்த சமாதானத்தை அடைய ஒரு வழி இருக்கிறது, அது ஒரு அற்புதமான வழி: அது தான் ஜெபம் என்ற வழியாகும். நீயும் என்னைப்போன்ற நபராய் இருந்தால், “இன்று ஜெபம் செய்ய எனக்கு எப்படி நேரம் கிடைக்கும்?” என்று யோசிக்கலாம். என் இருதயத்திலிருந்து (மற்றும் இதுவரையிலுள்ள என் அனுபவத்திலிருந்தும் கூட) என்னால் உனக்குச் சொல்ல முடியும்: நீ ஜெபிக்க நேரம் ஒதுக்கினால், நிச்சயம் உன் வாழ்க்கையில் நேரத்தைப் பெறுவாய்! 🙂

இது உண்மைதான்… சமாதானம் நிறைந்த வாழ்க்கையை, மன அழுத்தத்தால் கட்டுப்படுத்தப்படாத வாழ்க்கையை நீ விரும்பினால், இயேசுவுடன் பேசும் அமைதியான தியான நேரம் உனக்குத் தேவையாய் இருக்கிறது.

“நான் நேரத்தை இழந்துகொண்டிருக்கிறேன்” என்று நீ முதலில் நினைக்கலாம், ஆனால் நீ ஆண்டவருடன் நேரத்தைச் செலவிடுவதால் உனக்கு அதிக பலன் கிடைக்கிறது என்பதை விரைவில் நீ புரிந்துகொள்வாய்! அவர் தரும் சந்தோஷம், சமாதானம், பதில்கள், அவருடைய அன்பு, அவரது உதவி, அவருடைய பலம் மற்றும் அவரது பிரயாசம் ஆகிய அனைத்தையும் நீ பெற்றுக்கொள்வாய்.

இது உண்மையிலேயே ஆச்சரியமானது! ஆண்டவர் உன்னுடன் நேரத்தை செலவிட விரும்புவதால், அவர் உன் ஜெபங்களில் அதிக அக்கறை காட்டுகிறார். ஆமாம், அவர் உன்னுடன்தான் நேரம் செலவிட விரும்புகிறார்! அந்த நேரத்தில், அவர் உன்னிடமிருந்து நேரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார் – அவர் உனக்கு நேரத்தையும் ஜீவனையும் நிச்சயம் அதிகமாய் தருவார்!

இன்றே முயற்சி செய்து பார்! 🙂

நீ ஒரு அதிசயம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!