நீ சமாதானத்துக்கான தூதராக இருக்க விரும்புகிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ சமாதானத்துக்கான தூதராக இருக்க விரும்புகிறாயா?

சர்வதேச சமாதான தினம் என்று ஒரு தினம் உண்டு என்பது உனக்குத் தெரியுமா? செப்டம்பர் 21ஆம் நாள் உலக சமாதான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் நம்பிக்கையும் நோக்கமும் உலகெங்கிலும் உள்ள மக்களின் விரோதங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.

இது நீண்ட காலத்திற்கு முன்பே இயேசு நிலைநாட்டின ஒரு அழகான கருத்தாகும். ஆம், இயேசு நம்மை, அதாவது, உன்னையும் என்னையும், அவருடைய சமாதானத்தை சுமந்து செல்லும் தூதுவர்களாக இருக்கவும், நாம் செல்லும் இடமெல்லாம் சமாதானத்தைக் கொண்டு செல்லவும் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

“ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் [அதாவது நல்வாழ்வு மற்றும் செழிப்பு, ஆண்டவருடைய தயவு] உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.

சமாதான பாத்திரன் [ஆவியில் எளிமையுள்ளவர்கள் மற்றும் உபசரிப்பவர்கள்] அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம்[ஆசீர்வாதம்] அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.” (வேதாகமத்தில் லூக்கா 10:5-6 ஐ வாசித்துப் பார்க்கவும்)

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நீ எப்படி உன் அன்றாட வாழ்க்கையில் சமாதானத்தைக் கொண்டுவரக் கூடும்?

  1. ஒருவேளை உன்னைப் புண்படுத்திய உன் சக ஊழியர் மீது கோபமாக இருப்பதை விட்டுவிட்டு, அவருக்காக ஜெபித்து அவரை ஆசீர்வதிப்பதன் மூலம் நீ சமாதானத்தைக் கொண்டுவருவாயா?
  2. அல்லது உன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சி மற்றும் அன்பு நிறைந்த சூழலை ஏற்படுத்துவதன் மூலம் சமாதானத்தைக் கொண்டுவருவாயா?
  3. அல்லது உன் குடும்பத்தில் நல்ல, அன்பான உறவுகளை ஊக்குவிப்பதன் மூலம் சமாதானத்தைக் கொண்டு வருவாயா?
  4. ஏன் ஒரு நபருடன் சேர்ந்து ஜெபித்து, அவரை/அவளை ஆண்டவரோடு சமாதானம் செய்ய வைக்க வழிநடத்தக்‌ கூடாது?

சமாதானத்தைக் கொண்டுவரும் ஆற்றல் உன்னிடம் உள்ளது, ஆகவேதான் உன்னைச் சுற்றி அனைத்தும் நேர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. இன்று நீ இயேசுவின் சமாதானத்தின் தூதுவராக இரு!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்… நான் நிறைய வேதாகம போதனை கற்றல் தளங்களில் சேர்ந்திருக்கிறேன். மேலும் இத்தளம் எனக்கு மிகவும் பிடித்தமான‌ ஒன்றாக இருக்கிறது. இது எளிமையானது மற்றும் புரிந்துகொள்ள எளிதானதாக இருக்கிறது. எப்போதும் அவற்றை வாசிக்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை; ஆனால் நான் வாசிக்கும்போது, ​​என் வேதாகமத்தை மீண்டும் நேசிக்கத் துவங்குகிறேன். உங்கள் பதிவிலிருந்து ஆண்டவருடைய அன்பு பொழிந்தருளப்படுகிறது. என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு மிகவும் நன்றி.” (ஜாஸ்பர்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!