நீ சமாதானத்திற்கான தூதுவராக இருக்க விரும்புகிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ சமாதானத்திற்கான தூதுவராக இருக்க விரும்புகிறாயா?

சர்வதேச சமாதானத்தின் தினம் ஒன்று இருப்பது உனக்குத் தெரியுமா? இது செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் நம்பிக்கையும் நோக்கமும் உலகெங்கிலும் உள்ள எல்லா விரோதங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.

நீண்ட காலத்திற்கு முன்பே இயேசு போதித்தார்… இது ஒரு அழகான கருத்துதான். இந்த வாரம் அவரது சமாதானத்தைப் பற்றி நாம் பேசினோம், மேலும், அவரது சமாதானத்தினால், உன் ஆத்துமா புத்துணர்ச்சியடையவும், நினைவூட்டப்படவும், மீட்டெடுக்கப்படவும் நான் ஜெபிக்கிறேன். இப்போது இந்த சமாதானத்தை மற்றவர்களுக்கும் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், அது அற்புதமான விஷயம்! ஆம், இயேசு உன்னையும் என்னையும், அதாவது நம்மை, தம்முடைய சமாதானத்தின் தூதுவர்களாக இருக்கவும், நாம் எங்கு சென்றாலும் அவருடைய சமாதானத்தை எடுத்துச் செல்லவும் அழைக்கிறார்.

“ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று [அதாவது சுகம் மற்றும் செழிப்புக்கான ஆசீர்வாதம், தேவனுடைய தயவு] சொல்லுங்கள்.

சமாதான பாத்திரன், [இனிமையான உள்ளமும் விருந்தோம்பலும் உள்ளவர்] அங்கே இருந்தால், நீங்கள் கூறின [ஆசீர்வாதம்] சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.” (வேதாகமத்தில் லூக்கா 10:5-6 ஐ வாசிக்கவும்)

நிலையான சொற்களில், உன் அன்றாட வாழ்க்கையில் சமாதானத்தை எவ்வாறு பகிர்ந்துகொள்ளக் கூடும்?

  • உன்னைப் புண்படுத்திய சக ஊழியரிடத்தில் கோபமாக இருப்பதற்குப் பதிலாக, அவருக்காக ஜெபித்து அவரை ஆசீர்வதிப்பதன் மூலமாக பகிர்ந்துகொள்ள இயலுமா?
  • அல்லது ஒருவேளை உன்னைச் சுற்றி மகிழ்ச்சி மற்றும் அன்பின் சூழ்நிலையை வேண்டுமென்றே வெளிப்படுத்துவதன் மூலமாக பகிர்ந்துகொள்ள இயலுமா?
  • அல்லது உன் குடும்பத்தில் அன்பான உறவுகளை ஊக்குவிப்பதன் மூலம் பகிர்ந்துகொள்ள இயலுமா?
    மேலும் உங்களுக்கு தெரிந்த யாராவது ஒருவரை, தேவனுடன் சமாதானமாய் இருக்கும்படிக்கு வழிநடத்த ஏன் அவருடன் சேர்ந்து ஜெபிக்கக்கூடாது?

உன்னைச் சுற்றிலும் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நீ வல்லமையைப் பெற்றிருக்கிறாய், இன்று இயேசுவின் சமாதானத்தின் தூதுவராக இரு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!