நீ கிறிஸ்துவின் சுபாவத்தைப் பிரதிபலிக்கப் பிறந்திருக்கிறாய்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
முழு நிலவு காணப்படும்போது, இயற்கை நமக்கு ஒரு அற்புதமான காட்சியை வழங்குகிறது… சந்திரனின் ஒளி வட்டம் இரவு நேர வானத்தை எதிர்க்கும் வண்ணம் பிரகாசத்துடன் தெளிவாகத் தனித்து நிற்கிறது.
“இன்றிரவு சந்திரன் எவ்வளவு அழகாக இருக்கிறது! அது எவ்வளவு பிரகாசமாக பிரகாசிக்கிறது!” என்று நினைத்து நீ எப்போதாவது வியப்பில் ஆழ்ந்ததுண்டா? இருப்பினும், நிஜத்தில், அது உண்மை இல்லை… சந்திரன் தானாகப் பிரகாசிப்பதில்லை. ஒளியை உருவாக்கும் திறன் அதற்கு இல்லை. அது எரிந்து பிரகாசித்து, ஒளியை வெளியிடுகிற சூரியனின் ஒளியைப் பிரதிபலிப்பதன் மூலம் பிரகாசிக்கிறது.
நீயும் நானும் சந்திரனைப் போன்றவர்கள்தான். நம்மால் சுயமாக ஒளியை உருவாக்க முடியாது. ஆம், நாம் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறோம்; நாம் பிரகாசிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று வேதாகமம் கூறுகிறது (மத்தேயு 4:15ஐப் பார்க்கவும்)
கிறிஸ்து நம்மில் ஜீவிப்பதால்தான் நாம் பிரகாசிக்கிறோம்!
நீ அவருடைய சுபாவத்தை வெளிப்படுத்துவதால் நீ பிரகாசிக்கிறாய். மேலும், நீ அன்பில் நடந்துகொள்ளும்போதும், மன்னிக்கும்போதும், வேண்டுமென்றே உன்னைத் தாழ்த்திக்கொள்ளும்போதும், நீ பிரகாசிக்கிறாய்… மேலும் இந்த ஒளி மெய்யானது, ஏனெனில் அது அதன் மூலத்தைக் கண்டறிகிறது… இயேசுவே அந்த ஒளி!
நண்பனே/தோழியே இதைக் குறித்துத் தியானிக்கும்படி உன்னை அழைக்கிறேன்:
- உனக்கு முன்னதாக அவர் ஒளியாக இருந்ததால் நீ ஒளியாக இருக்கிறாய்.
- அவர் முதலில் உன்னை நேசித்ததால் நீ நேசிக்கிறாய்.
- அவர் தமது வெற்றியின் மூலம் மரணத்தை ஜெயித்ததால் நீ ஜீவனோடு இருக்கிறாய்.
எனவே, உன் வாழ்வு முழுவதுமே உனக்குள் செயல்படும் அவருடைய தெய்வீக சுபாவத்தின் பிரதிபலிப்பும் வெளிப்பாடுமாகும்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இயேசு என்னை மிகவும் நேசித்து எனது தேவையின்போது எப்படி உதவுகிறாரோ, அதைப்போலவே, மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவதற்கு, ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற மின்னஞ்சல் எனது அன்றாட வாழ்வில் எனக்கு உதவுகிறது. அவர் மூலம் என்னால் சகலத்தையும் செய்ய முடியும், நான் போராடி யாவற்றையும் மேற்கொள்ளுவேன். (ஜான்)