நீ கிறிஸ்துமஸுக்குத் தயாராகிவிட்டாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ கிறிஸ்துமஸுக்குத் தயாராகிவிட்டாயா?

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் அற்புதமான கேரல் பாடல் வரிகளின் வெளிச்சத்தில் நமது ஊக்கமளிக்கும் தொடர் தியானத்தைத் தொடர்ந்து தியானிப்போம்:

“ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
கிறிஸ்தேசு ஜனித்ததால்
வின் மன்னோரும் எவ்வான்மாவும்
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் என்றென்றும் பாடிடவே

ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
நம் மீட்பர் ஜனித்ததால்
வான் பூமியும் சிருஷ்டிகளும்
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே!”

யோவான் ஸ்நானகன் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாகும்படி தேவனுடைய மக்களுக்கு எடுத்துரைத்தான்…

“கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்!” (மாற்கு 1:3)

துரதிர்ஷ்டவசமாக, இந்த உலகம் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தை அதிகமதிகமாக மறந்துபோய்க்கொண்டிருக்கிறது. இயேசு என்பவர் மனிதகுலத்திற்கு ஆண்டவர் கொடுத்த பரிசு. தம்முடைய வருகையின் மூலம், இயேசு சமாதானம், விடுதலை மற்றும் குணம்பெறுதலை வழங்குகிறார். அவர் தரும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நீ நிறைவாய் பெற்றுக்கொள். நம் வாழ்விலும் நம் இருதயத்திலும் எல்லா இடத்தையும் பெறுவதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர்.

உன் இருதயத்தில் ஒரு அதிசயத்தை அனுபவிக்க நீ தயாரா? இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: “அன்புள்ள கர்த்தாவே, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், அதிக முக்கியத்துவமற்ற பல விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்போது, என் கவனத்தை இயேசுவின் மீது செலுத்த தயவுசெய்து எனக்கு உதவுவீராக. கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தின் பிரதிபலிப்பாக என் வாழ்க்கை அமைய உமது உதவி எனக்குத் தேவை! இயேசுவே, என் வாழ்வில் வந்ததற்காக உமக்கு நன்றி. உமது சமாதானம், நம்பிக்கை, அன்பு மற்றும் சந்தோஷத்தை என் வாழ்வில் அளித்ததற்கு நன்றி. உம் நாமம் மகிமைப்படும்படியாக என் பலவீனத்தில் உமது பலம் பூரணமாய் செயல்பட நீர் என் வாழ்க்கையை ஒரு எடுத்துக்காட்டாக வைப்பதற்கு உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

நீர் இம்மானுவேல் என்பதை நான் எப்போதும் நினைவில்கொள்ள எனக்கு உதவியருளும், தேவன் என்னோடு இருக்கிறீர், நீரே என் மிகப்பெரிய பொக்கிஷம்… இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் மட்டுமல்ல இந்த ஆண்டின் மற்றும் வருகிற ஆண்டின் எல்லா நாட்களிலும் நீர் என்னோடு கூடவே இருக்கிறீர்/இருப்பீர்! கர்த்தாவே, உமது பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பும். என் இருதயத்தையும் எண்ணங்களையும் உமக்கு நேராகத் திருப்ப உதவி புரியும். மற்றவர்களுக்கு உதவவும் அவர்களின் தேவைகளைக் கருத்தாய் கவனிக்கவும், அவர்களுக்கு உமது அன்பைக் காட்டவும் என் இருதயம் ஆயத்தமாய் இருக்க உதவுவீராக.

என்னை ஒருபோதும் தனியாக விட்டுவிடாததற்கு நன்றி. உமது சமூகம் ஒவ்வொரு நாளும் என் அருகில் இருப்பதற்கு நன்றி. என்னை உமக்குப் பிரியமான பிள்ளையாக மாற்றியதற்கு நன்றி, என்ன நடந்தாலும் நீர் எனக்காக இருப்பதற்கு நன்றி. என் வாழ்க்கையில் இம்மட்டும் நீர் செய்த நன்மைகளுக்காக நன்றி.

பிதாவே, நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!