நீ ஒரு விசேஷமான குடும்பத்தின் பங்காளர்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஒரு விசேஷமான குடும்பத்தின் பங்காளர்!

கிறிஸ்து எனக்குத் தந்திருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான அநேக சகோதர சகோதரிகளுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இக்குடும்பத்தில் இருக்கும் பல வித்தியாசங்களே இதன் அழகு, இது என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது… நீயும் இக்குடும்பத்தின் ஒரு பங்காளர்தான்! ஆம், தேவன் உன்னைத் தேர்ந்தெடுத்தார், அழைத்தார், உன்னைத் தமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்.

“தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.” (பரிசுத்த வேதாகமம், வெளிப்படுத்தின விசேஷம் 5:9‭-‬10)

நீ அங்கம் வகிக்கும் இக்குடும்பம் பல இனங்களையும், மொழிகளையும், தேசத்தில் உள்ள மக்களையும் உள்ளடக்கியது. இதை யோசித்துப் பார்த்தால், இது மிகவும் ஆச்சரியமானது மற்றும் அதிசயமானது. இவ்வுலகின் எட்டுத்திக்கிலுமிருந்து உனக்கு சகோதர சகோதரிகள் இருக்கின்றனர்.

குடும்பத்தில் நீ பங்காற்ற வேண்டிய சில விசேஷித்த பொறுப்புகள் இருக்கின்றன… ஊக்குவித்தல், ஆதரவளித்தல், தூக்கிவிடுதல், ஜெபித்தல் ஆகிய பொறுப்புகள் உள்ளன… இக்குடும்பம் மிகவும் விலையேறப்பெற்றது… இக்குடும்பத்தை நீ நேசித்து இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்து…

யுவதி என்றொரு சகோதரி எனக்கு எழுதிய மின்னஞ்சல்தான் இது: “வணக்கம் எரிக் அவர்களே, நான் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்னும் இந்த மின்னஞ்சலைப் பெற ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிறது; நாட்கள் வேகமாகப் பறந்தோடுகிறது. உங்களுக்கும் ஊழியத்தைத் தாங்கும் சகோதர சகோதரிகளுக்கும் நம் அனைவருக்காகவும் ஜெபிக்கின்றவர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலைப் பெறுவது என் வாழ்வில் மிகவும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் தேவன் எப்படி என்னோடு இந்த மின்னஞ்சல் மூலமாக பேசுகிறார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என் வாழ்விலும், என் குடும்பத்திலும், நண்பர்கள் வாழ்விலும் நடப்பது அனைத்தும் அப்படியே இந்த மின்னஞ்சல் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. நம் தேவன் எவ்வளவு ஆச்சரியமானவர். நம் வாழ்வில் நாம் அவருக்கு இடமளிக்கும்போது, மெதுவாக அவரது அன்பையும், கிருபையையும், மன்னிப்பையும், ஆதரவையும் நமக்கு நினைவுபடுத்துகிறார். நீங்கள் செய்கிற அற்புதமான இந்த ஊழியத்திற்காகவும், இதற்கு ஆதரவாக இருக்கும் சகோதர சகோதரிகளுக்காகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பிதாவே, இவ்வூழியத்தைச் செய்கின்ற எரிக் அவர்களுக்காகவும் அவருக்குப் பின்னால் இருந்து செயல்படுகிற அனைத்து ஆதரவாளர்களுக்காகவும் நான் நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே நீர் இவர்களை ஆசீர்வதியும்.”

|யுவதியைப் போலவே நீயும் இயேசுவின் சரீரமாகிய குடும்பத்தின் ஓர் அங்கத்தினராய் இருக்கிறாய்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!