நீ ஒரு புதிய சிருஷ்டி!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஒரு புதிய சிருஷ்டி!

என் அன்பரே, கம்பளிப்பூச்சியானது பட்டாம்பூச்சியாக மாறும் செயல்முறை உனக்கு நன்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். இது இயற்கையின் கவர்ந்திழுக்கும் மாற்றங்களில் ஒன்றாகும்.

கம்பளிப்பூச்சியாக மாறுவதற்கு ஒரு சிறிய முட்டைப்புழுவிலிருந்து (லார்வாவில்) சகல செயல்பாடும் தொடங்குகிறது… ஒரு கம்பளிப்பூச்சி தனக்கென ஒரு தற்காலிக வீட்டை உருவாக்குகிறது.
வெளியிலிருந்து பார்க்கும்போது, இந்த வீடு எதுவுமே நடக்காத ஒரு இடமாகத் தோன்றும். இது கிட்டத்தட்ட ஒரு நிசப்தமான இடமாக, அசைவு இல்லாமல், ஓசை இல்லாமல் இருக்கிறது… ஆனால் அங்கு ஜீவன் இல்லாமல் இல்லை…

பல நாட்கள் கழிந்து, திடீரென்று, உயிர்பெற்று வெடித்து, கூட்டை விட்டு வெளியேறுகிறது! ஒரு ஜோடி அற்புதமான இறக்கைகள் வானத்தைப் பிளந்து படைப்பின் அழகுக்கு மெருகூட்டுகின்றன.
பட்டாம்பூச்சியைத் தப்பிக்க வைக்க யாராவது செயற்கையாக கூட்டைத் திறந்தால், அது மரித்துவிடும் என்பது உனக்குத் தெரியுமா?

கூட்டை விட்டு வெளியேற போராடும் இந்த செயல்முறையே பட்டாம்பூச்சியின் இறக்கைகள் உறுதியானதாகவும் வலுவாகவும் மாற அனுமதிக்கிறது, அதன் மூலம், காற்று மற்றும் மழை போன்ற இயற்கை கூறுகளையும் மற்றும் அதன் வாழ்நாளில் சந்திக்கும் எல்லாவற்றையும் அதனால் எதிர்கொள்ள முடியும். கூட்டிலிருந்து வெளியேற இந்த முக்கிய பகுதியானது தவிர்க்க முடியாததும் உயிரினத்தின் ஆயத்தமாகுதலுக்கு அவசியமுமாய் இருக்கிறது.

உன் கூடு என்பது தேவனுடைய இருதயமும், அவருடைய பிரசன்னமும், அவருடைய அன்புமாகும்.
மறைவான இடத்தில், பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் பேசுகிறார், உனக்குப் போதிக்கிறார், உன்னைப் பலப்படுத்துகிறார்.

அளவில்லாத கிருபையும் வலிமையும் கொண்ட வாழ்வுக்கு கர்த்தர் உன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார், அவருடைய அடிச் சுவடுகளையும் அவரது ஜெயத்தின் முத்திரையையும் கொண்டு வாழ உன்னை அழைக்கிறார்.

  • மரணத்தின் மீதான அவரது ஜெயம்! (வேதாகமத்தில், 1 கொரிந்தியர் 15:55-58ஐப் பார்க்கவும்)
  • நோயின் மீதான அவரது ஜெயம்! (வேதாகமத்தில், ஏசாயா 53:5ஐப் பார்க்கவும்)
  • உன் பிரச்சனைகள் மற்றும் பயங்கள் மீது அவரது ஜெயம்! (வேதாகமத்தில் சங்கீதம் 54:7ஐப் பார்க்கவும்)

உன்னை சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவிடாமல் தடுக்கும் அனைத்தின் மீதும் அவருடைய ஜெயம்!
அவருடைய ஜெயமே இன்று உன் எதிர்காலத்தை வரையறுக்கிறது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!