நீ ஒருபோதும் தனியாக விடப்படுவதில்லை

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஒருபோதும் தனியாக விடப்படுவதில்லை

சில சமயங்களில், இந்த உலகத்தின் சத்தங்களான, நமது சமூகத்தின் கூச்சல்களாலும் குழப்பங்களாலும், நாம் ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது என்ற அளவிற்கு, நாம் மிகவும் விரக்தியடைகிறோம். அது நமது கண்களுக்கு மறைவாக இருந்து, போராடும் எதிரியை எதிர்த்துப் போராடுவதுபோல இருக்கிறது.

இப்படிப்பட்ட கடினமான காலங்களில், இயேசு நம்மிடம், “அமைதியாக இரு… நான் இங்கே இருக்கிறேன், பயப்படவேண்டாம்” என்று கூறுகிறார்.

அப்படிப்பட்ட நாட்களில் நீ போராடி, சோர்வடைந்து, தனிமையாக இருப்பதாக உணரும்போது, இயேசு நிச்சயமாகவே உன் அருகில் இருக்கிறார்.

அப்பொழுது, “தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது” என்று சங்கீதக்காரன் சொல்வதுபோல உன்னால் அறிக்கையிட முடியும். (வேதாகமத்தில் சங்கீதம் 131:2ஐ வாசித்துப் பார்க்கவும்)

கர்த்தர் உனது சமாதானமாக இருக்கிறார், இன்றும் என்றும் அவர் உனக்கு சமாதானம் அருள்பவராய் இருக்கிறார்! நீ அவருக்கு அருகில், அவரது இருதயத்திற்கு மிகவும் நெருக்கமான நபராக, நிம்மதியாகவும் சமாதானத்தோடும் இருக்கிறாய்.

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறாயா?

“கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பான, நிம்மதியளிக்கும் பிரசன்னத்திற்காக நன்றி. ஒரு தாய் நள்ளிரவில் தன் அன்புக் குழந்தையின் முதல் அழுகுரலைக் கேட்கும்போது, எழுந்து ஒடுவதுபோல, நீர் என்னோடு கூட இருக்கிறீர். எனது குழப்பங்களை என்னைவிட்டு நீக்கிப்போட்டு என்னை அமைதிப்படுத்தி, உமது பரிபூரண சமாதானத்தை அளித்து என்னை ஆறுதல்படுத்தியமைக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நீரே என் சமாதானம். உம்மாலே நான் அமைதியாக இருக்கிறேன், நிதானமாக அமர்ந்திருக்கிறேன் மற்றும் இளைப்பாறுகிறேன். உமது நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலானது, நான் எப்பொழுதும் தேவனால் நேசிக்கப்படுகிறேன் மற்றும் விரும்பப்படுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருந்துவருகிறது. என் முழு குடும்பமும் என்னைக் கைவிட்டுவிட்டனர். அவர்கள் எனக்கு எந்த ஒரு நல்லது நடப்பதையும் விரும்பவில்லை, எனது வாழ்வு அவர்களைப் பிரியப்படுத்துவதாகவே இருந்து வந்தது. எனது கணவன் எனக்குத் துரோகம் செய்தபொழுது கூட, எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரை ஏற்றுக்கொள்ளச் சொன்னார்கள். என் உணர்வுகளையும் காயங்களையும் வேதனைகளையும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. நான் ஆண்டவரிடம் ஜெபித்தேன், அவர் எனக்கு உதவுவதை நிறுத்திவிடவில்லை, மாறாக, அவர் என் எல்லா வேதனைகளையும் மாற்றிப்போட்டார், மிகுதியான அன்பும், உள்ளார்ந்த சமாதானமும் சுகமும் என்னில் பொங்கி வழிந்ததை நான் உணர்ந்தேன்.

‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து, என்னுடைய வாழ்விற்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும், தேவன் எனக்காக மிகப்பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார் என்பதையும் நான் அறிந்துகொண்டதால், என் ஆவிக்குரிய வாழ்வு மிகவும் பலமுள்ளதாக வளர்ச்சியடைந்தது. என் பழைய வாழ்க்கை முறையையும் எதிர்மறையான எண்ணங்களையும் செயின்ட் தாமஸ் என்ற சிறிய தீவிலேயே விட்டுவிட்டு, நேர்மறையானவைகளைச் சிந்திக்க வேண்டும் என்றும், என்னைப் போலவே, இப்படிப்பட்ட விஷயங்களைக் கடந்து செல்லும் மற்றவர்களின் வாழ்வை மேம்படுத்த அவர்களுக்கு உதவும்படி, என் பயணத்தைத் தொடர கவனமாய் இருக்க வேண்டும் என்றும் சொல்லி இது என்னை உற்சாகப்படுத்தியது. ‘அனுதினமும் ஒரு அதிசயத்தை’ என் சக ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் …அவர்களிடம் இந்த அதிசய மின்னஞ்சல்களை பகிர்ந்துகொள்ள தினமும் காத்திருப்பேன்.. நீங்கள் செய்கிற எல்லா காரியங்களுக்காகவும் நன்றி. நான் ஒவ்வொரு நாளையும் சந்தோஷத்துடன் சந்திக்கிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் நான் திருச்சபைக்குச் சென்று ஆண்டவரைத் துதிக்கிறேன், மற்றும் எல்லா இடங்களிலும் ஆண்டவரைத் துதிக்கிறேன். உங்களுக்கு நன்றி!! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக” (லிசா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!