நீ ஒருபோதும் தனியாக இல்லை

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஒருபோதும் தனியாக இல்லை

சில சமயங்களில், நாம் இனி ஒருபோதும் சமாதானத்துடன் வாழ முடியாதபடிக்கு, இந்த உலகத்தின் சத்தங்களால் மிகவும் நெருக்கப்படுகிறோம். நம் சமூகத்தின் சலசலப்பு மற்றும் சந்தடியால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடுவது போல் இருக்கிறது…

இந்தக் கடினமான காலங்களில், இயேசு நம்மிடம் பேசி, “அமைதி, நான் இங்கே இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம்” என்று சொல்கிறார்.

அந்த நாட்களில், நீ தனிமையில், சண்டையிட்டு சோர்வடைவதுபோல் உணரும் போது, ​​இயேசு உன் அருகில் இருக்கிறார்.

பின்னர், சங்கீதக்காரனைப் போல நீ பாடலாம், “தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன், என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.” (வேதாகமத்தில் சங்கீதம் 131:2 ஐ வாசிக்கவும்)

இன்றும் என்றென்றும் ஆண்டவரே உன் சமாதானமாக இருக்கிறார்! நீ அவருக்கு அருகில் அமைதியாகவும் சமாதானத்துடனும் இருக்கிறாய், அவருடைய இருதயத்திற்கு மிக அருகில் இருக்கிறாய்.

நீ என்னுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறாயா?… “கர்த்தராகிய இயேசுவே, உம் அன்பு நிறைந்த அமைதியான பிரசன்னத்திற்கு நன்றி. நள்ளிரவில் அழுகையின் முதல் சத்தத்தில் தன் அன்புக் குழந்தையிடம் ஓடி வரும் தாயைப் போல, நீர் என்னுடன் இருக்கிறீர். எனக்கு ஆறுதல் அளிப்பதற்காகவும், உம்முடைய மிகச்சரியான ஷாலோமை வெளியிடுவதற்காகவும், என் கொந்தளிப்பை அமைதிப்படுத்துவதற்காகவும் நன்றி. நீரே எனக்கு சமாதானமாக இருக்கிறீர். ஆண்டவரே, உம் நிமித்தமாக நான் அமைதியாக இருக்கிறேன், நான் நிலையாக இருக்கிறேன், நான் இளைப்பாறுகிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!