நீ ஒருபோதும் ஆண்டவரை விட்டு வெகு தொலைவில் போய்விட மாட்டாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஒருபோதும் ஆண்டவரை விட்டு வெகு தொலைவில் போய்விட மாட்டாய்!

உனக்கும் ஆண்டவருக்கும் இடையே உள்ள தூரத்தை உன்னால் அளக்க முடிந்தால், இப்போது நீ அவருக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்கிறாய் என்று சொல்வாயா அல்லது தூரமாய் இருப்பதாக உணர்கிறாய் என்று சொல்வாயா?

உன் பதில் எதுவாக இருந்தாலும் சரி, நீ ஆண்டவரிடமிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்துகொள்.

நிச்சயமாக இல்லை, ஆண்டவர் உன்னை அடைய முடியாதபடி, நீ வெகு தொலைவில் இல்லை!

(மன்னிப்பும் பரிசுத்த ஆவியானவரின் வரமும்) “தூரத்திலிருந்து வரவழைக்கும் அனைவருக்கும்” பொதுவானது என்று வேதாகமம் சொல்கிறது.

“வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.” (அப்போஸ்தலர் 2:39)

பேதுரு குறிப்பிடும் மக்கள் அனைவரும் புவியியல் ரீதியாக வெகு தொலைவில் வாழ்ந்து வந்தவர்கள்; நம் இருதயங்களில் நாமும் கூட ஆண்டவரிடமிருந்து வெகு தொலைவில் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். தாங்கள் “ஆண்டவரிடமிருந்து வெகு தொலைவில்” இருப்பதாக உணரக்கூடியவர்கள் அல்லது அவ்வாறு கருதுபவர்களான இப்படிப்பட்ட மக்களுக்காகவே ஆண்டவரின் இந்த வாக்குத்தத்தம் உள்ளது. ஒருவேளை இதுதான் உன்னுடைய நிலைமையா?

நமது அன்றாட வாழ்க்கையில், நமது சந்தேகம், தோல்வி மற்றும் தனிமை போன்ற உணர்வுகள், ஆண்டவர் நம்மைத் தேட முடியாத அளவுக்கு நாம் அவரிடமிருந்து “வெகு தூரம் சென்றுவிட்டோம்” என்ற பொய்யான செய்தியை நமக்குக் கூற முடியும். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது!

உன் பாவங்களும், உன் கருத்துக்களும் மற்றும் உன் உணர்வுகளும், பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தேட முடியாதபடிக்கு நீ வெகு தொலைவில் இருக்கிறாய் என்று உன்னை நம்ப வைக்க இடமளிக்க வேண்டாம். இங்கேயே, இப்போதே, அவரிடம் உன் இருதயத்தைத் திறக்கும்படிக்கு நீ ஒரு நல்ல இடத்தில் இருக்கிறாய். உன்னைச் சந்திக்கும் பாதையை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது அவருக்குத் தெரியும். உண்மையில், இயேசு உனக்காக சிலுவையில் மரித்ததால், அவரது பாதையை உனக்காகத் திறந்து உன்னைச் சந்திப்பதற்கான அனைத்தையும் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!