நீ ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.” (வேதாகமத்தில் சங்கீதம் 34:4 ஐ வாசிக்கவும்)
இதோ, அசாதாரணமும் ஆச்சரியமுமான ஒரு அறிவிப்பு: “நான் எல்லா பயத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டேன். நான் எதற்கும் பயப்படுவதில்லை.”
இன்று ஆண்டவர் உனக்குச் சொல்லும் வாக்குத்தத்தம் இதுதான்: நீ பயத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாய். இனிமேல் அது உன் மீது எந்தப் பிடிப்பையும் கொண்டிருப்பதில்லை! அதனால்தான்:
- உன் சந்தேகங்களின் மத்தியில், ஆண்டவர் உன் இருதயத்தில் பேசுகிறார், தம்முடைய வல்லமையால் உன்னைப் பலப்படுத்துகிறார். நீ திகையாதே.
- உன் கவலைகளின் மத்தியில், அவர் அனைத்து புரிதலைவிடவும் மேலான தம்முடைய சமாதானத்தை உனக்குத் தருகிறார். நீ அசைக்கப்பட முடியாத ஒருவராய் இருக்கிறாய்.
- உன் நிச்சயமற்ற நிலைகளில், அவருடைய ஆவியானவர் உன்னை வழிநடத்தி உனக்கு ஆலோசனை வழங்குகிறார். நீ நல்ல தீர்மானங்களை எடுக்கிறாய்.
நீ தேவனைத் தேடுவதாலும், அவருடைய வார்த்தையை ஒவ்வொரு நாளும் பெற்றுக்கொள்வதாலும், பயம் விலகி ஓடுகிறது. அது இயேசுவின் நாமத்தில் உன் வாழ்க்கையை விட்டு வெளியேறுகிறது!
"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்
* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை
அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.