நீ ஏன் கவலைப்படுகிறாய்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஏன் கவலைப்படுகிறாய்?

இயேசு இன்று உனக்காக ஒரு விசேஷமான வார்த்தையை வைத்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அந்த வார்த்தை இவ்வாறு கூறுகிறது…

“இன்று ஒரு அழகான நாள். என்னை நம்பி, என்னிடம் ஒப்படைத்துவிடாமல், நீ பிடித்துக்கொண்டிருக்கும் காரியம்தான் இன்னும் உன்னைக் கவலைப்பட வைக்கிறது. இதைப் பற்றி சற்று யோசித்துப் பார்: நான் இன்னும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறேன். நான் பிரபஞ்சத்தின் மீது ஆட்சி செய்கிறேன். நான் உனக்காக மாம்சமாக வந்த தேவனுடைய குமாரனாகிய இயேசு; நான் தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறேன். நான் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கிறேன், எல்லாவற்றையும் ஒன்றாக ஆளுகை செய்கிறேன். (வேதாகமத்தில் கொலோசெயர் 1:17ஐப் பார்க்கவும்)

நீ எனக்குப் பிரியமான பிள்ளை, ஆகவே, நீ எனக்கு மிகவும் விலையேறப்பெற்றவன்/ விலையேறப்பெற்றவள். உன் நன்மைக்காக எல்லாவற்றையும் செய்கிறேன். (வேதாகமத்தில் ரோமர் 8:28ஐப் பார்க்கவும்)

உன்னைக் கவலையடையச் செய்வதையும் பயமுறுத்துவதையும் என்னிடம் ஒப்படைத்துவிடு. உன் பிரச்சனைகள் உன்னை மூழ்கடிக்க விடாதே; அதற்குப் பதிலாக, அவற்றை உன் ஜெபத்தின் மையப் பொருளாக வைத்துவிடு. அவற்றை இனி சுமக்க வேண்டாம்; என்னிடம் கொண்டு வா. (வேதாகமத்தில் 1 பேதுரு 5:7ஐப் பார்க்கவும்)

என்னைத் தேடு… அப்பொழுது நீ என்னைக் கண்டுபிடிப்பாய். (வேதாகமத்தில் எரேமியா 29:13-14ஐப் பார்க்கவும்) வா, என் பாதபடியில் அமர்ந்திரு. இன்று உன் வாழ்வில் காணப்படும் உன் சூழ்நிலைகள், குழப்பங்கள் மற்றும் உன் பாடுகளை ஒதுக்கி வைத்துவிடு… “இருக்கிறேன்” என்பது என் நாமம். உனக்கு வேண்டியதெல்லாம் நான் மட்டுமே. நீ விரும்பும் சமாதானம் நானே. நான் மிகுதியான ஜீவனைக் கொண்டிருக்கிறேன். நீ தேடும் மகிழ்ச்சி என்னிடம் உண்டு. (யோவான் 10:10ஐப் பார்க்கவும்) வா… நான் இங்கே இருக்கிறேன்.”

இந்த வார்த்தை உன்னைத் தொட்டிருந்தால், நீ அவரைத் தேட விரும்பினால், இப்போதே வந்து, “உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு” என்ற இந்த அழகான பாடலைப் பாடி இயேசுவை ஆராதிக்கும்படி உன்னை அழைக்கிறேன். https://youtu.be/L8MXgmcubN0?si=SW-p8lPcJqpUkJvc நாம் ஆண்டவர் மீது கவனம் செலுத்துவோம்.

நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிக்கலாமா: “இயேசுவே, நான் இங்கே இருக்கிறேன். நான் உமது அழைப்புக்குப் பதிலளிக்கிறேன். இந்தப் பிரச்சனைகள் மற்றும் உணர்வுகளை இனி நானே சுமக்க விரும்பவில்லை. எனது பயம், தோல்விகள், முயற்சிகள், என்னை கவலையடையச் செய்யும் அனைத்தையும் மற்றும் என் மன அழுத்தத்தையும் உம் வசம் தருகிறேன். நான் உம்மிடம் அனைத்தையும் தந்து விடுகிறேன். ஆம் ஆண்டவரே, என்னிடமுள்ள அனைத்தையும் எடுத்துக் கொள்வீராக. இயேசுவே, என்னை இரட்சியும்! உமது உதவிக்கும் உமது அன்புக்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் நீர் மாத்திரமே உண்மையான மையமாக இருப்பதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் என் வாழ்நாள் முழுவதும் கவலையோடு போராடியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உங்கள் செய்தியை வாசிப்பதால், அமைதியான நேரத்தை ஒதுக்கி, எங்கு இருந்தாலும் ஜெபம் செய்வதற்கும் தியானம் செய்வதற்கும் இது எனக்கு உதவியாய் இருக்கிறது. என் பதட்டம் இப்போது கட்டுக்குள் உள்ளது. நான் இந்தச் செய்தியை நாள் முழுவதும் தியானிக்கிறேன், அதனால் எனக்கு ஆறுதல் தேவைப்படும்போது, அதைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. என்னை அணுகியதற்கு என் இருதயத்திலிருந்து நன்றி செலுத்துகிறேன். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக” (சாலமன், நாக்பூர்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!