நீ எழுந்திருக்க வேண்டிய நேரம் இது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ எழுந்திருக்க வேண்டிய நேரம் இது!

“இன்னும் ஒரு ஐந்து நிமிடம் அம்மா… இரண்டே இரண்டு நிமிடத்தில் எழுந்து விடுவேன் அப்பா… எனக்கு மிகவும் தூக்கமாக வருகிறது…”

தான் இப்பொழுது எழுந்திருக்கப் போவதில்லை என்பதை, போர்வை சூட்டின் கதகதப்பில் உறங்கும் உன் பிள்ளை அழகாக உனக்குச் சொல்கிறது. சற்று வளர்ந்துவிட்ட ஒரு பிள்ளையாகவோ அல்லது பெற்றோராகவோ நீ இருந்தாலும், இதை நீ அனுபவித்திருக்கிறாயா?

உனது பரம பிதா உன்னை எழும்பச் சொல்லும்போது, எத்தனை முறை நீ, “இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் சில நாட்கள், அல்லது இன்னும் சில வாரங்கள், இப்பொழுது வேண்டாம்” என்பன போன்ற பதில்களை அளித்திருக்கிறாய்? ஆனால், நாம் தேவனுக்குக் கீழ்படிவது மிகவும் அவசியமான ஒரு காரியம் என வேதம் சொல்லுகிறது…

“கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.” (பரிசுத்த வேதாகமம்,1 சாமுவேல் 15:22)

இதுதான் உன் நிலை என்றால், தேவன் உன்னை எழுந்திருக்கச் சொல்லி தனிப்பட்ட விதத்தில் அழைப்பு கொடுத்திருந்தால், அந்த அழைப்பிற்கு பதிலளிக்க, நீ உனது சுகபோகத்தை, உனது சிறு சிறு பழக்கங்களை நிச்சயமாக விட்டுவிட வேண்டும். அந்த அழைப்புக்குக் கீழ்ப்படியும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன். இன்று மட்டும் அல்ல இந்த வாரம் முழுவதிலும் மற்றும் எந்நாளும் கீழ்ப்படி. பயத்தினாலும் கட்டாயத்தினாலும் அல்ல, தேவன் மீதுள்ள அன்பினால் நீ கீழ்ப்படிய வேண்டும்!

நீ தேவ சித்தத்தை நிறைவேற்ற விரும்புகிறாயா? அவருக்குக் கீழ்ப்படியாமல் நம்மால் தேவ சித்தத்தை நிறைவேற்ற முடியாது.

என்னோடு இணைந்து இந்த ஜெபத்தை ஏறெடுப்பாயா?… “கர்த்தாவே, நான் விசுவாசத்துடன் இதைச் செய்யப்போகிறேன். கடந்த காலத்தில், உமது அழைப்பிற்கு பதில் அளிக்க தாமதித்தேன். ஆனால் இப்பொழுது விசுவாசித்து முன்னேற விரும்புகிறேன். இப்பயணத்தில் நீர் என்னோடு தினந்தோறும் இருக்கிறீர் என்பதை விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, உமது உதவிக்காகவும், வல்லமைக்காகவும் நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆவியானவர் இந்த ஊழியத்தைக் கொண்டு பலமுறை என்னோடு பேசி இருக்கிறார். பல செய்திகளின் கூட்டாக ஒரு செய்தி வந்தாலும், அதிலிருந்து தேவன் என்னிடம் என்ன பேசுகிறார் என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். இச்செய்தி நான் சரியான பாதையில் செல்கிறேனா அல்லது தவறான பாதையில் செல்கிறேனா என்பதை எனக்கு உணர்த்துகிறது. தேவ அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து ஊழியம் செய்துகொண்டிருக்கும் தேவ ஊழியர் எரிக் மற்றும் அவருடைய குடும்பத்திற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.” (நகோமி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!