நீ எப்படி இருந்தாலும் சரி, அதற்காக ஆண்டவருக்கு நன்றி சொல்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ எப்படி இருந்தாலும் சரி, அதற்காக ஆண்டவருக்கு நன்றி சொல்!

தேவன் மரபணு மாறாத நகல் உயிரினங்களை உருவாக்குவதில்லை. அவர் மிகத்துல்லியமாக இயங்கும் ரோபோக்களை(இயந்திரங்களை) உருவாக்குவதில் ஆர்வமுள்ளவராய் இல்லை, மேலும் அவர் குறைபாடற்ற, மெருகூட்டப்பட்ட கிறிஸ்தவர்களையும் தேடிக்கொண்டிருக்கவில்லை. நான் இருக்கிற வண்ணமாகவே அவர் என்னை நேசிக்கிறார், நீ இருக்கிற வண்ணமாகவே அவர் உன்னையும் நேசிக்கிறார்! இயேசு நமது நல்ல மேய்ப்பன், தம்முடைய ஒவ்வொரு ஆடுகளையும் பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறார். அவர் உன்னை முழுமையாக அறிந்திருக்கிறார்!

“… வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான்.”
(வேதாகமத்தில் யோவான் 10:3ஐ வாசித்துப் பார்க்கவும்)

நீ அவர் முன் தோன்றும்போது,​ ஏன் மோசேயைப் போன்றோ அல்லது ஜாய்ஸ் மேயர் போன்றோ நீ இல்லை என்று இயேசு உன்னிடம் கேட்க மாட்டார். நிச்சயமாக அவர் அப்படிக் கேட்கவே மாட்டார்! அவர் உன்னிடம் கேட்பதெல்லாம், நீ ஏன் நீயாக வாழவில்லை என்பதுதான்.

நீ முற்றிலும் விசேஷமான ஒரு நபர், உன்னைத் தவிர வேறு யாரும் உன்னைப்போல் இருக்க முடியாது… நீ நீதான்! உனது பலம் மற்றும் உன் குறைபாடுகள் எதுவாயினும் கூட, உன்னை நீயே பாராட்ட கற்றுக்கொள்! ஆம், ஏனென்றால் இவ்வாறாக ஆண்டவர் தம்முடைய ஆவியால் உனக்கு உதவி செய்து உன்னை பூரணப்படுத்தி, உன்னை உருமாற்ற அவருக்குக் கிடைக்கிற ஒரு வாய்ப்பாக இது அமைகிறது.

நான் இப்படி இருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட வேண்டாம். இவ்வண்ணமாக இருப்பதற்காக வருத்தப்படாதே! அதற்குப் பதிலாக, நீ இப்படிப்பட்ட நபராய் இருப்பதற்காக ஆண்டவருக்கு நீ நன்றி சொல்லலாமல்லவா?

“கர்த்தராகிய இயேசுவே, நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”
(வேதாகமத்தில் சங்கீதம் 139:14ஐ வாசித்துப் பார்க்கவும்)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “என்னை நானே நேசிக்க முடியாமல் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் ஆண்டவர் என்னை நேசிக்கிறார் என்பதை அவர் எனக்கு நினைவூட்டினார். தாக்குதலுக்கு மேல் தாக்குதல் வந்தாலும் அவர் தமது உண்மையை வெளிப்படுத்திக் காட்டினார். அவர் என்னை ஒருபோதும் தனியே விட்டுவிடவில்லை. ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சல் பல சந்தர்ப்பங்களில் என்னை உற்சாகப்படுத்தி, என் ஆவியை உயிர்ப்பித்தது. தேவன் என் நிலைமைக்கு ஏற்ப சரியாகப் பேசியிருக்கிறார். சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து இந்த ஊழியத்தைச் செய்வதற்காக உங்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், கர்த்தர் ஆசீர்வதிப்பாராக” (ஜெனிபர்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!