நீ எனக்குத் தேவை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ எனக்குத் தேவை!

நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் தேவை என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது. உதாரணத்திற்கு…

  • மோசே தலைமைத்துவப் பொறுப்பை யோசுவாவுக்கு வழங்கினான், அவன் மோசேயின் ஊழியத்தில் நல்ல பங்கை ஆற்றினான் (வேதாகமத்தில் யாத்திராகமம் 24:13ஐப் பார்க்கவும்)
  • தன்னையும் தன் மாமி நகோமியையும் போஷிப்பதற்கு போவாஸின் உதவி ரூத்துக்கு தேவைப்பட்டது. (வேதாகமத்தில் ரூத் 3:16ஐப் பார்க்கவும்)
  • கிதியோன் தனது மக்களைக் காப்பாற்ற 300 மனுஷர்களுடன் சென்றான் (வேதாகமத்தில் நியாயாதிபதிகள் 7:7ஐப் பார்க்கவும்)
  • சகல அதிகாரமும் படைத்தவராகிய இயேசுவுக்கே, “யாரும் தேவைப்படாமல் இல்லை”, அவர் பேதுரு மற்றும் யோவானின் உதவியைக் கேட்க முன்வந்தார் (வேதாகமத்தில் லூக்கா 22:8ஐப் பார்க்கவும்)

ஆண்டவர் உன்னிடம் எந்த ஊழியத்தை ஒப்படைத்திருந்தாலும், அதை நிறைவேற்ற உனக்கு உதவும்படி அவர் ஜனங்களை நியமித்திருக்கிறார், அவர்களிடம் ஒப்படைத்திருக்கும் ஊழியத்தை அவர்கள் நிறைவேற்றும்படி, உனக்கு உதவுகிற மக்களை உன்னைச் சுற்றி ஏற்படுத்துகிறார்.

நாம் ஒருவருக்கொருவர் தேவையாய் இருக்கிறோம், இப்படி இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்பினார்… ஒரு குழுவாக ஒன்று சேர்வதும், நமது வேறுபாடுகளைத் தாண்டி வளர்ச்சியடைவதும் நம்மை மகத்தான வளர்ச்சி அடையச் செய்யும் என்பதையும், அதே போல் அவருடைய ஊழியத்தையும் மகத்தான வளர்ச்சியடையச் செய்யும் என்பதையும் ஆண்டவர் அறிந்திருந்தார்!

ஆகவே, இது உண்மைதான் நண்பனே/தோழியே… உனக்கு நான் தேவைப்படுவதுபோல் எனக்கும் நீ வேண்டும்! நாம் ஒன்றாக இணைந்து, ஆண்டவருடைய மகிமைக்காக அவருடைய ராஜ்யத்தை வளரச் செய்வோம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!