நீ உன் வழியில் சரியாகச் சென்றுகொண்டிருக்கிறாய்

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ உன் வழியில் சரியாகச் சென்றுகொண்டிருக்கிறாய்

நீ எப்போதாவது வழியைக் கண்டறிய (GPS) ஜிபிஎஸ் ஐப் பயன்படுத்தியுள்ளாயா? பரிந்துரைக்கப்பட்ட பாதை உன்னை இலக்கிலிருந்து வெகுதூரம் அழைத்துச் செல்வதாகத் தோன்றியதால், ஜிபிஎஸ் ஆனது திசைகளைத் தவறாகப் புரிந்துகொண்டதாக நீ எப்போதாவது நினைத்திருக்கிறாயா?

ஆண்டவருடனான உன் பயணத்தில், இவ்வகையான சூழ்நிலையை நீ எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆண்டவர் உனக்கு ஒரு இலக்கைக் காண்பிக்கிறார், அதோடு கூட, நீ பின்பற்ற வேண்டிய பாதையில் அவரை விசுவாசிக்கும்படியும் கேட்கிறார்.

ஆனால் சில நேரங்களில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட பயணத்திட்டம் சற்று அதிருப்தி அளிப்பதாய் இருக்கிறது. அதில் காயங்கள், துரோகங்கள், வியாதிகள் மற்றும் பின்னடைவுகள் இருக்கலாம்… இது நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்தச் சமயங்களில், பரிசுத்த ஆவியானவர் உனக்கு மீண்டும் உறுதியளிக்கவும், உன்னுடன் பேசவும், உன்னை ஆறுதல்படுத்தவும் நீ அவரை நம்பலாம்.

இதை விசுவாசி…நீ கற்பனை செய்யக்கூடியதைவிட மிகப் பெரிய இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறாய்!

சிறந்த ஜிபிஎஸ்-ஐப் பின்பற்றுங்கள் – கர்த்தரைப் பின்பற்றுங்கள்! சொல்லப்போனால், ஜிபிஎஸ் என்றால் தேவனுடைய மிகச்சரியான பார்வை (GPS : God’s Perfect Sight) என்று புன்னகையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… அவர் எங்கே போகிறார் என்பது அவருக்குத் தெரியும்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!