நீ இழந்த நேரத்தை உனக்கு திரும்ப அளிக்க ஆண்டவரால் கூடும்
முகப்பு ›› அற்புதங்கள் ››
உன் தவறுகளைச் சரிசெய்வதற்கும், வித்தியாசமாகச் செயல்படுவதற்கும், அல்லது மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் அனுபவிக்கவும் ஒரு கால இயந்திரத்தின் (time Machine) மூலமாக உன் கடந்த காலத்திற்குப் பயணிக்க வேண்டும் என்று நீ எப்போதாவது கற்பனை செய்ததுண்டா?
“நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.” (யோவேல் 2:25)
காலம் கடந்து செல்வதைக் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அது விரைவாகப் நகர்வதுபோல் தோன்றுகிறது. வேலை, குடும்பம் மற்றும் எல்லாவிதமான கடமைகளுக்கும் இடையில், நாட்கள் மற்றும் வாரங்கள் ஏவுகணை வேகத்தில் பறக்கின்றது. நேரமின்மையால் சில நேரங்களில், நம் வாழ்க்கையின் பாதையில், நம் கனவுகளை ஒதுக்கி வைக்கின்றோம். உன் சொந்த வியாபாரத்தை தொடங்க, உன் தேவாலயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் பணியாற்ற, பட்டப்படிப்பை முடிக்க மீண்டும் பள்ளிக்குச் செல்ல அல்லது உன் அறையின் மூலையில் இருந்து உன்னை பார்க்கும் அந்த இசைக்கருவியைக் கற்றுக்கொள்ள என்பது போன்ற கனவுகள் உன்னுள் இருந்திருக்கிறதா?
ஆண்டவரால் உனக்கு நேரத்தை திரும்ப அளிக்க முடியும். வெட்டுக்கிளி பட்சித்த ஆண்டுகளை உனக்கு திரும்பத் தரும் வல்லமை அவருக்கு இருக்கிறது. ஒரு வேளை நீ அவரிடமிருந்து வெகு தொலைவில் இருந்திருக்கலாம்… அல்லது மற்ற விஷயங்களுக்கு உன்னை அர்ப்பணித்து உன் கனவை ஓரமாக விட்டுச் சென்றிருக்கலாம்.
இன்னும் தாமதமாகவில்லை. ஆண்டவருடன் எதுவும் ஒருபோதும் தாமதமாகாது. உங்களுக்குள் இந்த திறமைகள், ஆற்றல், திராணி, சாமர்த்தியம் மற்றும் பரிசுகளை அவர் வைத்துள்ளது அவருடைய மகிமைக்காகவே, அவருக்காக அவற்றைப் பயன்படுத்த அவர் நிச்சயமாக உங்களுக்கு உதவுவார்!
இன்று, இந்த உண்மையைப் பற்றிக் கொண்டு, உனக்கான ஆண்டவரின் கனவைத் தேடத் துவங்கு. ஒரு படி மேலே எடு… தொடங்குவதற்கு இன்னும் காலதாமதமாகவில்லை!