நீ இயேசு கிறிஸ்துவில் இருக்கிறாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ இயேசு கிறிஸ்துவில் இருக்கிறாய்!

இதை சற்று கற்பனை செய்து பார்… நீ ஒரு சிறிய தனி விமானத்தில் போய்க்கொண்டிருக்கிறாய், விமானத்தில் நிலைமை மோசமடைகிறது. எந்த நேரத்திலும், விமானத்திலிருந்து கீழே குதிக்கச் சொல்லி உனக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்பதால், உடனடியாக உன் பாதுகாப்புக் கவசமாகிய பாராசூட்டை அணியுமாறு விமானி கட்டளையிடுகிறார்! மிக மோசமான ஒரு சம்பவம் நடக்கிறது…விமானம் தீப்பிடித்துவிடுகிறது, நீ கீழே குதிக்கிறாய், பாராசூட் திறக்கிறது, நீ வெட்டாந்தரையில் பாதுகாப்பாய் இறங்குகிறாய். ஆனால் அங்கிருந்த சிலரோ, விமானியின் எச்சரிக்கை செய்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சரியான நேரத்தில் தங்கள் பாராசூட்களை ஆயத்தப்படுத்தி வைக்கவில்லை … அவர்கள் மரித்துவிடுகிறார்கள்.

“அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். …” (வேதாகமத்தில் 1 கொரிந்தியர் 1:30ஐ வாசித்துப் பார்க்கவும்)

“உட்பட்டு”(உள்) என்ற வார்த்தைக்கு, மூல பாஷையாகிய கிரேக்க மொழியில், “அதற்குள், உள்ளேயிருந்து” என்று அர்த்தமாகும். நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, ​பாராசூட்டில் இணைந்திருக்கும் ஒருவரைப்போல, அவருடைய ஆள்தத்துவத்தில் நீ இணைந்திருக்கிறாய்.

கிறிஸ்துவில் இருப்பதும், அவரில் ஐக்கியப்பட்டிருப்பதும் மிகவும் அவசியமாகும், ஏனென்றால் ஆண்டவர் உன்னை அவர் மூலம் பார்க்கிறார். விமானத்திலிருந்து மெல்லிய காற்றின் ஊடாகக் குதிக்கும்போது, பாராசூட்டில் நம்பிக்கை வைப்பதுபோல், ஆண்டவர் இயேசுவில் நீ நம்பிக்கை வைத்துவிடு. பின்னர், உன்னால் அதை உணர முடியவில்லை என்றாலும் கூட, “நீ கிறிஸ்து இயேசுவில் இருக்கிறாய்” என்பதை விசுவாசத்துடன் நம்பு.

கிறிஸ்துவில் இருப்பது என்பது அவர் செய்த அனைத்தையும் மற்றும் அவர் இருக்கும் அனைத்தையும் பகிர்ந்துகொள்வதாகும். ஒரு விசுவாசியாக, நீ ஆண்டவருடைய பார்வையில் ஒரு புதிய “நிலையை” பெறுகிறாய் என்பதுதான் அதன் அர்த்தமாகும். நீ அவருடைய குமாரனில் இருப்பதால், ஆண்டவர் உனக்கு வாழ்வையும் நித்திய ஜீவனையும் தருகிறார்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “’அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலானது தினமும் என்னை உற்சாகப்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் என்னை சுமந்து செல்லும் ஒருவர் எனக்கு இருப்பதைப்போல் நான் உணர்கிறேன்; ஏனென்றால் ஒவ்வொரு நாளும், உங்களது செய்தியானது, “ஆண்டவர் என்னை நேசிக்கிறார், ஆண்டவர் என் அருகில் இருக்கிறார், அவர் எனக்குள் இருக்கிறார், எல்லா இடங்களிலும் இருக்கிறார், நான் எப்போது வேண்டுமானாலும் ஆண்டவரோடு பேச முடியும்” என்று எனக்கு நினைவூட்டுகிறது.” (சச்சின்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!