நீ அவரிடம் எல்லாவற்றையும் சொல்லலாம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ அவரிடம் எல்லாவற்றையும் சொல்லலாம்!

மனதின் ஆரோக்கியம் குறித்த இந்த வார தியானத்தை நாம் தொடர்ந்து தியானிக்கலாம். இத்தொடர் உனக்கு ஊக்கமளித்து, பயனுள்ளதாக இருக்கிறதென்றும் உன்னில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் நான் நம்புகிறேன். இதுவே உனக்காக நான் ஏறெடுக்கும் ஜெபம்! நான் உன்னை மிகவும் பாராட்டுகிறேன், உன்னோடு கூட நின்று, உனக்கு உதவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

உன் மனம் கவலையான எண்ணங்களால் துவண்டுபோகும்போது, நீ என்ன செய்வாய்?

சில சமயங்களில், நாம் வேறு எதையும் கவனிக்க முடியாத அளவிற்கு கவலை நம் மனதில் சத்தமாகப் பேசக் கூடும்! ஆனால் ஆண்டவர் உனக்காக வித்தியாசமான ஒரு வாழ்வை விரும்புகிறார். நீ விடுதலையோடும், சுமையற்ற இலகுவான மனதுடனும் வாழ வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

சில சமயங்களில், என்னுடைய பெலன் அல்லது ஊக்கம் குன்றிப்போகும்போது,​ நான் இந்த ஜெபத்தை ஏறெடுப்பேன்:

“ஆண்டவரே, நான் மிகவும் வெறுமையாக உணர்கிறேன், இதற்குமேல் என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை. இன்று நான் செய்ய வேண்டியவற்றைச் செய்ய உமது ஊக்கத்தையும் அன்பையும் தருமாறு வேண்டிக்கொள்கிறேன்”.

பிறகு திரும்பிப் பார்க்கையில், கர்த்தருடைய கிருபையினால் சகலமும் நேர்த்தியாய் செய்யப்பட்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன்! அவர் உண்மையிலேயே நல்லவராக இருக்கிறார். சரீரப் பிரகாரமான தேவையாக இருந்தாலும் சரி, ஆவிக்குரிய தேவையாக இருந்தாலும் சரி, அல்லது மனரீதியான தேவையாக இருந்தாலும் சரி, நம்முடைய எல்லா தேவைகளையும் அவர் வழங்குகிறார்.

உன் கவலைகளை உனக்குள்ளேயே வைத்துக்கொள்வதற்குப் பதிலாக, அது தொடர்ந்து உனது தோள்களில் அதிக பாரத்தைக் கொடுக்க இடமளிக்காமல், அதைக் கர்த்தருடைய கரத்தில் இறக்கி வைத்துவிடு. அவருடைய உதவியை நாடு. அவர் உன்னை மீட்கும்படி அதிக மகிழ்ச்சியோடு வருவார், அவருடைய நாமம் மகிமைப்படுத்தப்படும்.

“என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” (சங்கீதம் 94:19)

ஆண்டவர் இன்று உன்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறார், அவ்வாறு உன்னை உற்சாகப்படுத்த சில சிறிய வழிகளில் என் மூலம் அவர் கிரியை செய்வதற்காக நான் அவரை மகிமைப்படுத்துகிறேன்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் மிகவும் பாக்கியவானாக உணர்கிறேன்! ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை வாசிக்கும்படி ஒவ்வொரு நாளும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்! இப்போதெல்லாம் நான் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறேன், நான் கவலைப்படுவதில்லை, என் விசுவாசம் வளர்ந்துள்ளது, கிறிஸ்துவின் மூலம் எல்லாம் கூடும் என்பதை நான் அறிந்துகொண்டேன்! ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது மற்றும் சில கடினமான நேரங்களை சுமுகமாகக் கடந்து செல்ல எனக்கு உதவுகிறது!(டேனியல், சென்னை)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!