நீர் விரும்புவது எனக்கு வேண்டும்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீர் விரும்புவது எனக்கு வேண்டும்…

“என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.” (யோவான் 14:14)

எப்படியோ, இத்தனை ஆண்டுகளாக, ஒவ்வொரு ஜெபத்தையும் நிறைவு செய்யும் நேரத்தில் “இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்” என்ற வார்த்தைகளைச் சொல்லி ஜெபத்தை முடிக்க வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் மேற்கண்ட வசனத்தில் இயேசு உண்மையில் என்ன அர்த்தத்தில் கூறுகிறார் என்று உனக்குத் தெரியுமா?

அவர் விரும்புவதற்கேற்ப நமது விருப்பங்களை சீரமைத்துக்கொள்வதைப் பற்றியதே இந்த வசனமாகும். சீஷர்கள் அந்த‌ நேரத்தில் அப்படித்தான் புரிந்துகொண்டார்கள்.

ஆனால் நீ அதை எப்படிச் செய்வாய்? தேவனுடைய சித்தம் என்னவென்று எப்போதும் உனக்குத் தெரியாதபோது, நீ எப்படி ஜெபிக்க வேண்டும்? அதற்காக பரிசுத்த ஆவியானவர் உனக்கு உதவ விரும்புகிறார்:

“அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.” (ரோமர் 8:26-27)

இது ஒரு நல்ல செய்தி! ஆண்டவர் உனது சிறந்த விருப்பங்களை தனது இருதயத்தில் வைத்திருக்கிறார். அதனால், அவருடைய திட்டங்கள் மற்றும் நோக்கங்களுக்கு நீ சரி என்று கூறும்போது, நீ இதுவரைக்கும் விரும்பியதை விட அதிகமாகப் பெறும்படி செய்வார். மிகவும் செழிப்பான வாழ்க்கை, அதிக மகிழ்ச்சி, மற்றும் உனக்காக அவர் வைத்திருக்கும் எல்லாவற்றையும் அதிகமாகத் தருவார்!

உனக்கு எது நல்லது என்பதை இயேசு நன்றாக அறிந்திருக்கிறார், அவருடைய விருப்பங்களுக்கு ஏற்ப உன் விருப்பமும் ஒத்திசைந்து இருக்குமானால், அவரைப் பின்பற்றுவது உனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். இப்போது சொல்லப்படுகிற வசனம் அதை உறுதிப்படுத்துகிறது: “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” (ரோமர் 8:28)

இன்றைக்கே அதைச் செய்யத் தொடங்க உனக்கு விருப்பம் உண்டா? ஜெபித்து அவரை நம்புவதன் மூலம் உன் விருப்பத்தை விட்டுவிட்டு அவரது விருப்பத்தை நாடுவாயா? இன்று இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன், “இயேசுவே, நீர் விரும்புவதையே நானும் விரும்புகிறேன். நீர் எனக்காக ஆயத்தம் செய்திருக்கிற பாதையில் நான் நடப்பேன். பரிசுத்த ஆவியானவரே, நீர் எனக்குக் காட்டுவதை நான் புரிந்துகொள்வேனாக, உமது வார்த்தையின் மூலம் நீர் எனக்கு வெளிப்படுத்த விரும்பும் சத்தியங்களை நான் புரிந்துகொள்ள உதவி செய்வீராக. நான் ஜெபிக்கும்போது, சரியான வார்த்தைகளைக் கண்டுபிடித்து உபயோகிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.”

இந்த 2024ம் வருடம் முழுவதும் ஆண்டவருடைய அன்பும் கிருபையும் சமாதானமும் உன் வாழ்வில் நிறைந்திருக்க வேண்டுமென்று, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்!

நீ ஒரு அதிசயம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!