நீங்கள் தேடப்படுகிறீர்கள்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீங்கள் தேடப்படுகிறீர்கள்…

இன்று, அன்பின் தேவன் அவருடைய பாசத்திற்குரிய அனைத்தையும் தேடுகிறார்… அது நீங்கள் தான்.

“நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்;” (பரிசுத்த வேதாகமம், எசேக்கியேல் 34:16)

இயேசு உங்களுடன் பேசுவதற்கோ, உங்களை அழைப்பதற்கோ, அல்லது உங்கள் இருதயத்தின் கதவைத் தட்டுவதற்கோ ஒருபோதும் சோர்ந்துபோவதில்லை; ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எப்போதும் உங்களைத் தம்முடையதாக்கிக்கொள்ள விரும்புகிறார்…

  • நீங்கள் அவருடன் பரிபூரண ஐக்கியத்தை அனுபவிக்கவேண்டும் (வேதாகமத்தில் 1 கொரிந்தியர் 1: 9 ஐ பார்க்கவும்)
  • உங்கள் வாழ்க்கை அவருடைய ஒளியினாலும் சத்துவத்தினாலும் நிறைந்திருக்க வேண்டும் (வேதாகமத்தில், சங்கீதம் 36: 9 ஐ பார்க்கவும்)
  • உங்கள் இருதயம் மீட்கப்பட்டு, பலப்படுத்தப்பட்டு, குணமடைய வேண்டும் (வேதாகமத்தில், லூக்கா 4:18 ஐ பார்க்கவும்)

ஆம், அவர் உங்கள் வாழ்க்கையை மாற்றி, உங்கள் ஆத்துமாவைத் தொட விரும்புகிறார்; உங்களை பலப்படுத்தவும், நீங்கள் அவருடன் இணைந்து, அவரில் வேரூன்றியிருக்கவும் விரும்புகிறார்!

இன்று, உங்களைத் தேடும் தேவன், உங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் அனுமதிக்கும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!