நீங்கள் குறையற்றவர் அல்ல, அதனால் என்ன? :-)

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீங்கள் குறையற்றவர் அல்ல, அதனால் என்ன? :-)

குயத்தொழில் என்பது குயவனின் முழு கவனத்தையும் கோரும் ஒரு நுணுக்கமான கலை. உருவமில்லாமல் பிசுபிசுவென இருக்கும் களிமண்ணுக்கு சிறப்பான வடிவத்தை கொடுப்பதே குயவனின் நோக்கம். அந்த குவளை அதன் எல்லா மகிமையோடு இன்னும் ஏற்படவில்லை, குயவனின் எண்ணத்தில் தவிர.

குயவன் பொறுமையோடு எச்சங்களை நீக்கி, அதை தொடுவதற்கு சுரசுரப்பாக்கும் எல்லா கட்டிகள் மற்றும் புடைப்புகளையும் நீக்குகிறார்.கடைசியில் உருவாகும் பொருள், மென்மையான, பளபளப்பான, சிறப்பாக மெருகூட்டப்பட்ட, குறைவற்ற தோற்றத்தை உடைய ஒரு குவளை.

நீங்கள் இந்த குவளையை போன்றவர்! ஒருவேளை நீங்கள், மெருகூட்டப்படாத, கடினமான, குறையுள்ளவராக உங்களை எண்ணலாம்…

ஆனால் ஆண்டவர், அந்த தெய்வீக குயவன், உங்களை மென்மையாக்கவும், தூய்மையாக்கவும் செயலாற்றி கொண்டிருக்கிறார்! உங்களுக்காக பிரத்தியேகமாக்கப்பட்ட, இந்த வசனதில் நீங்கள் வாசிப்பது போல, ஆண்டவர் சொல்கிறார், “….. உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.” (வேதாகமம், ஏசாயா 1:25)

ஆண்டவர் தாமே இந்த கிரியையை உங்களுக்குள் செய்கிறார். நீங்கள் பயப்பட தேவையில்லை…நம் ஆண்டவர் பெலத்தவர், ஆனாலும் மனதுருக்கமுடையவர், அவருடைய உள்ளம் உங்கள் மீது உள்ள அன்பினால் நிறைந்துள்ளது.

ஆண்டவர் இதை செய்வதற்கு கொஞ்ச காலம் எடுக்கலாம், சில நேரங்களில் மிகுந்த காலமாகலாம், ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால், ஆண்டவர் அவருடைய குவளையின் மீது வைத்துள்ள கருத்தூன்றிய பார்வையும், இப்படி ஒரு அற்புதமான வேலையை செய்து முடித்தோம் என்று அவர் அனுபவிக்கும் திருப்தியும் மகிழ்ச்சியுமே!

ஆம், நீங்கள் அவருடைய ஒரு படைப்பு, தலைசிறந்த படைப்பு! 2 தீமோத்தேயு 2:21ல் எழுதியிருக்கிறபடி, அவருடைய கனத்துக்குரிய பாத்திரமாயிருக்கிறீர்கள். 

“ஆகையால் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன்/அவள் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்/ள்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!