நீங்கள் ஆண்டவரின் பதில்
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஒவ்வொரு நாளும், இந்த மின்னஞ்சல் செய்திகளை வாசிப்போரிடம் இருந்து, தேவன் அவர்களை எவ்வாறு உயர்த்தி ரட்சித்தார் என்னும் பல சாட்சிகள் எனக்கு வந்து சேர்கின்றது. இந்த எளிய அன்றாட மின்னஞ்சலின் மூலம் தேவன் இப்படி பிரசித்தமான பல விஷயங்களை செய்வது உண்மையிலேயே ஒரு அருட்கொடையும் பாக்கியமும் ஆகும். ஆண்டவருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!
இதில் நிச்சயமானது என்னவென்றால், தேவன் மக்களை ஆசீர்வதிக்க மனிதர்களையே பயன்படுத்துகிறார். எப்படியிருந்தாலும், நாம் கிறிஸ்துவின் உடல்! (சுவிசேஷம், 1 கொரிந்தியர் 12:27). ஆண்டவரின் பிள்ளைகளாகிய நமக்கு, அவருடைய அன்பை வெளிப்படுத்தும் பொறுப்பு, நம் கையில்தான் உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். நம் நண்பருக்கு அந்த சிறிய ஊக்குவிக்கும் செய்தியை அனுப்புவது, அல்லது தேவையில் இருக்கும் ஒரு அண்டை வீட்டாருக்கு உதவிக்கரம் நீட்டுவது, நம் கையில்தான் உள்ளது. (சுவிசேஷம், மத்தேயு 19:19)
இந்த சாட்சியை ஒரு வாசகர் அனுப்பி இருந்தார் : “உங்களிடமிருந்து வரும் இந்த மின்னஞ்சல் செய்தி ஒரு நாள் இவ்வாறு அறிவித்தது, ‘ஆண்டவர் உன்னை யாரோ ஒருவருடைய வாழ்க்கையில் பயன்படுத்தப் போகிறார்’ என்று. மெய்யாகவே அடுத்த நாளே, நான் இரண்டு வருடமாக தொடர்பில் இல்லாத ஒரு தோழியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவளுக்குள் ஏதோ ஒன்று என்னை அழைக்கும்படி தூண்டியது என்றாள். அவள் விவாகரத்தின் விளிம்பில் இருந்தாள், முற்றிலும் விரக்தி அடைந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதையும் கருத்தில் கொண்டிருந்தாள். அந்த நாள், நான் அவளுக்காக ஜெபித்தேன். அவளை ஆறுதல் படுத்தி, அவள் சார்பாக ஆண்டவரை நோக்கி கண்ணீரோடு கூப்பிட்டேன். அன்றிலிருந்து, அவளுடைய திருமண வாழ்வு சிதறாமல் மீட்டெடுக்கப்பட்டது!”
நீங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் வாங்கப்பெற்று இரட்சிக்கப்பட்டதால், கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கின்றார். அதனால், ஆண்டவர் உங்களை மற்றவருடைய வாழ்க்கையில் ஆசீர்வாதமாக அனுப்பி, அவர்களுக்கு பதில்களை கொடுப்பர்…ஒவ்வொரு கஷ்டத்திற்கும் பதில் கொடுப்பார் : இயேசு !
என்னோடு ஜெபியுங்கள் : ஆண்டவரே, நீர் நேசிப்பது போல நானும் நேசிக்க விரும்புகிறேன், பிறரை நீர் ஆசீர்வதிக்க உதவும் ஒரு பாத்திரமாக இருக்க விரும்புகிறேன். ஆண்டவரே, மற்றவரை நீர் ஆசீர்வதிக்க, தேற்ற, கட்டியெழுப்ப என்னை பயன்படுத்தும்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்!”
உங்கள் வாழ்க்கையில் உள்ள யாரேனும் ஒருவருக்கு இந்த “அனுதினமும் ஒரு அற்புதம்” மின்னஞ்சல்கள் ஆசீர்வாதமாய் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? உதாரணத்திற்கு, ஒரு நண்பரோ உறவினரோ? நீங்கள் இப்படி யாரையாவது பதிவு செய்ய விரும்பினால் (அந்த நபருடைய அனுமதியுடன்) இந்த பக்கத்திற்கு செல்லவும் : https://tamil.jesus.net/