நீங்கள் ஆண்டவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீங்கள் ஆண்டவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது என்று வேதாகமம் சொல்கிறது (யோபு 3:25), நான் என்ன விசுவாசிக்கிறேனோ, அப்படியே எனக்கு நடக்கும். (மத்தேயு 8:13) நான் தெய்வீகத் தொடுதலை எதிர்பார்க்கும்பொழுது, அது அப்படியே நடக்கும் என்று எனக்குத் தெரியும். நம் விசுவாசத்தின்படியே நமக்கு நடந்தேறுகிறது என்று வேதாகமம் சொல்கிறது (மத்தேயு 9:29).

ஆண்டவரிடமிருந்து நீ என்ன எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாய்? இன்றைய தினத்தில் நீ அற்புதங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாயா? ஒரு “மிகச் சிறிய” அற்புதமாவது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாயா?

உதாரணமாக, எனக்கு வாகனம் நிறுத்தும் இடம் (parking) தேவைப்படும்போதெல்லாம், என் விசுவாசத்தை செயல் படுத்துவது எனக்கு பிடிக்கும்… என் தேவையை ஆண்டவர் பூர்த்திசெய்யப் போகிறார் என்று முன்பே அறிந்து, அது நடப்பதையும் நான் காண்பேன்! ஒரு நாள் நாங்கள் பாரிஸில் ஒரு கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ரவுண்டானாவுக்கு அருகில், காரில் ஒருவர் என்னிடம், “நாம் எப்படி வாகனத்தை பார்க்கிங் செய்ய இடத்தைக் கண்டுபிடிப்பது?” என்று கேட்டார். நான், “கவலைப்பட வேண்டாம், ஆண்டவர் ஏற்கனவே கொடுத்துவிட்டார்” என்று சொன்னேன். உண்மையிலேயே, நாங்கள் கூடுகை நடக்கும் இடத்திற்கு வந்தபோது, ஒரு கார் அந்நேரத்தில் வெளியேறி, எங்களுக்கு வாகனம் நிறுத்த ஒரு இடத்தை ஏற்படுத்திவிட்டுச்சென்றது!

என் காரில் இருந்தவர், “நான் பல வருடங்களாக பாரிஸ் நகரத்தில் டாக்ஸி டிரைவராக இருந்தேன், இப்படிப்பட்ட எதையும் நான் பார்த்ததில்லை. இது உண்மையிலேயே ஒரு அதிசயம்!” என்று ஆச்சரியப்பட்டார். இங்கே என்ன நடந்ததென்று கவனித்தீர்களா? நான் இந்த விஷயத்தில் ஆண்டவரை நம்பினேன், நாடினேன். நாளடைவில் என் விசுவாசம் பெலனடைந்திருந்ததால், ஆண்டவர் எனக்காக ஒரு வாகனம் நிறுத்துமிடத்தை வழங்கப் போகிறார் என்று நான் விசுவாசிப்பது எனக்கு இயற்கையான ஒன்றாக இருந்தது.

விசுவாசம் என்பது ஒரு தசை போன்றது. நீ அதைப் பயன்படுத்தினால், அது வலுவடையும். இன்று, உன் விசுவாசத்தை வெளியே கொண்டுவா! உன் வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும் ஆண்டவரை சார்ந்திருக்கத் தொடங்கி பலன்களைப் பார். இது அதிசயங்களுக்கான ஒரு திறந்த கதவு!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!