நீங்கள் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லலாம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீங்கள் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லலாம்!

கவலையான எண்ணங்களால் உங்கள் மனம் ஆட்கொள்ளப்படும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

கவலை சில நேரங்களில், நாம் வேறு எதையும் கேட்கவோ பார்க்கவோ முடியாத அளவிற்கு, நம் மனதில் மிகவும் சத்தமாகப் பேசக் கூடும்! ஆனால் ஆண்டவர் உங்களுக்காக வித்தியாசமான ஒன்றை விரும்புகிறார்… நீங்கள் ஆவியில் விடுதலையுடனும், இலகுவான மற்றும் பாரமில்லாத மனதுடனும் இருப்பதை அவர் பார்க்க விரும்புகிறார்.

சில நேரங்களில், நான் என் பலம் அல்லது உற்சாகத்தின் முடிவுக்கு வரும்போது, ​​நான் இந்த ஜெபத்தை ஏறெடுப்பேன்:

“ஆண்டவரே, நான் உமக்குக் கொடுக்க எதுவும் மீதம் இல்லாதது போல் வெறுமையாக உணர்கிறேன். இன்று நான் செய்ய வேண்டியதைச் செய்ய உமது உந்துதலையும் உமது அன்பையும் கேட்டு மன்றாடுகிறேன். ஆமென்”

அதன்பிறகு, நான் அதைப் பற்றி யோசிக்கும்போது, ​​எல்லாம் நிவர்தியாகிறதை நான் உணர்கிறேன், கர்த்தருக்கும் அவருடைய கிருபைக்கும் நன்றி செலுத்துகிறேன்! அவர் உண்மையிலேயே நல்லவர், அவர் நம்முடைய தேவைகளான சரீரம், ஆத்துமா, உணர்ச்சி என்று எதுவாக இருந்தாலும் சரி. அவை அனைத்தையும் பூர்த்தி செய்கிறார்.

உன் கவலையை நீயே வைத்துக்கொண்டு, அவைகளை உன் தோள்களில் தொடர்ந்து சுமந்து கொண்டிருப்பதற்கு பதிலாக, அவற்றை கர்த்தரிடத்தில் வைத்து விடு. அவருடைய உதவிக்காக கெஞ்சி மன்றாடு… அவர் உன்னை மீட்டுக்கொள்வதில் அதிக மகிழ்ச்சியடைவார், மேலும் அவருடைய நாமம் மகிமைப்படும்.

“ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?.” (வேதாகமம், சங்கீதம் 94:19)

ஆண்டவர் இன்று உன்னை உற்சாகப்படுத்துகிறார், மேலும் அதற்காக, சில சிறிய வழிகளில் என் மூலம் கிரியை செய்ததற்காக நான் அவரை மகிமைப்படுத்துகிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!