நீங்கள் அதிக செயல் சார்ந்தவரா? அல்லது உறவு சார்ந்தவரா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீங்கள் அதிக செயல் சார்ந்தவரா? அல்லது உறவு சார்ந்தவரா?

என்னுடைய எழுத்துக்கள் சிலவற்றை நீங்கள் வாசித்திருப்பீர்களானால், நான் “தனிப்பட்ட உறவுகளை” விட, இயல்பாக “திட்டங்கள் மற்றும் செயல்களை” முன்வைத்து செயல்படுவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் ஆண்டவர் வேறொரு வழியில் நடக்கும்படியாக, உண்மையிலேயே என்னை மாற்றியிருக்கிறார்…

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? ஆண்டவருடனான உங்கள் உறவைப் பற்றி நீங்கள் சில நேரங்களில் இப்படி நினைக்கிறீர்களா?…

  • “இன்று நான் அவருக்குப் போதுமான அளவு நேரத்தைக் கொடுக்கவில்லை!”
  • “நான் என் வேதாகமத்தை இன்னும் அதிகமாகப் படித்திருக்கலாம்/படித்திருக்க வேண்டும்!”
  • “இன்று நான் 10 நிமிடங்கள் கூட ஜெபம் செய்யவில்லை!”

ஆண்டவருடனான வாழ்க்கை செயல்திறனுக்கான ஒன்று அல்ல. மாறாக உறவு சார்ந்தது. ஆண்டவர் உங்களிடமிருந்து எதையும் கேட்கவில்லை.

அவர் உங்கள் பங்காக அதிக ஜெபங்களையோ, அநேக நல்ல செயல்களையோ, அல்லது இதை செய் அல்லது அதை செய் என்று எந்த விஷயங்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாகவே, இந்த விஷயங்கள் அவரிடம் கிட்டிச் சேரவும், அவரை நன்கு அறிந்து கொள்ளவும் உங்களுக்கு உதவக்கூடும். ஆனால் இந்த “செய்ய வேண்டிய விஷயங்களை” விட, ஆண்டவர் உங்களைத்தான் முழுவதுமாக விரும்புகிறார்.

இதைத்தான் எழுத்தாளர் சி.எஸ்.லூயிஸ் (C.S.Lewis) இவ்வாறு கூறினார்: “ஆண்டவர் நம்மிடமிருந்து எதையும் விரும்புவதில்லை. அவர் நம்மையே விரும்புகிறார்”.

ஆண்டவர் உங்களை விரும்புகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் உங்கள் இருதயத்தைத் தேடுகிறார். அவர் மேலோட்டமாக அல்லாமல், உங்களுடன் ஆழமான உறவிலிருக்க விரும்புகிறார்.

நம்மை முற்றிலுமாக ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று வேதாகமம் நம்மை வலியுறுத்துகிறது: “… நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.” (ரோமர் 6:13)

இதுவே ஆண்டவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது: நீங்கள் எதையாவது செய்து நிறைவேற்றுவது முதன்மையானதும் முக்கியமானதும் அல்ல; மாறாக, நீங்கள் அவருடன் கூட ஒரு நபராக இருக்க வேண்டும். முதலில், கர்த்தர் உங்களுடன் உறவாட விரும்புகிறார். இதுவே அவருடைய முன்னுரிமை. ஒவ்வொரு நாளும் இது என்னுடைய மற்றும் உங்களுடைய அனுபவமாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!