நாம் சிறப்பாக செயல்பட முடியாதபோது என்ன நிகழும்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நாம் சிறப்பாக செயல்பட முடியாதபோது என்ன நிகழும்?

சில நேரங்களில், நமக்கு சந்தேகம் வரும்போதும், ​நாம் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று நமக்குத் தெரியாதபோதும், நாம் பயப்படும்போதும் ஆண்டவர் நம்மோடு கூட இல்லை என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், “தேவ ஆவியானவர் உங்களில் வாசமாயிருக்கிறார்” என்று வேதாகமம் சொல்கிறது. (1 கொரிந்தியர் 3:16) இதன் அர்த்தம் என்னவென்றால், தம்முடைய ஆவியானவர் மூலமாக, தேவன் எப்பொழுதும் நமக்குள்ளும், நம்மோடும் இருக்கிறார் என்பதேயாகும். அவர் ஒருபோதும் மாறுவதில்லை!

நீ ஒரு கிறிஸ்தவராக மாறியதிலிருந்து, ஒரு புதிய சுபாவத்தைத் தரித்துக்கொண்டாய். (2 கொரிந்தியர் 5:17) மேலும் இந்தப் புதிய சிருஷ்டியின் சுபாவமானது நீ நன்றாக இருக்கும்போது அல்லது நீ சிறப்பாக செயல்படும்போது மட்டும் உனக்குள் இருப்பதில்லை. நீ முழு பலத்துடன் செயல்படாத நாட்களிலும், நீ இதற்கு மேல் என்னால் முடியாது என்று உணரும்போதும் அது உன்னைவிட்டு மறைந்துபோகாது. அதற்காக நீ நன்றி செலுத்து!

இந்தப் புதிய சுபாவமானது விலைக்கிரயம் செலுத்தி வாங்கப்பட்டது. உனக்காக இயேசு செய்த தியாகமே அதை உறுதிப்படுத்தி, அதற்குப் பலனளிக்கிறது. நீ சந்தேகப்படும் நாட்களிலும், தவறான தீர்மானங்களை எடுக்கும் நாட்களிலும் பரிசுத்த ஆவியானவர் உன்னை விட்டு விலகுவதில்லை. அவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார். இயேசுவைத் தெரிந்துகொள்வதன் மூலமும் அவருக்காக வாழ்வதைத் தெரிந்துகொள்வதன் மூலமும் இந்த அசாதாரணமான ஈவை நீ பெற்றுக்கொள்வாய்: ஆவியானவர் உனக்குள் ஜீவிப்பதே அந்த ஈவு! நீ இனி ஒருபோதும் தனியாக இருக்க மாட்டாய்! இது அற்புதமானது!

இந்த சத்தியத்தின் ஆழத்தையும் வல்லமையையும் அறிய நான் இன்று உன்னை ஊக்குவிக்கிறேன்: பிதாவாகிய தேவன், குமாரனாகிய ஆண்டவர் மற்றும் பரிசுத்த ஆவியானவர்… ஆம், நித்தியமானவரும் சர்வவல்லமையுள்ளவருமான தேவன் இந்த நாள் முழுவதும் உன்னுடன் இருக்கிறார்! நீ தனியாக இல்லை!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது நான் தனிமையில் இல்லை என்பதையும், எல்லாவற்றிலும் மிகச்சரியாக நான் செயல்படவில்லை என்றாலும் பரவாயில்லை என்பதையும் உணர வைக்கிறது. நான் தேவனால் நேசிக்கப்படுகிறேன் என்பதை இது எனக்குக் கற்றுக்கொடுத்தது.” (மெர்சி, குமுளி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!