நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்தால் என்ன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்தால் என்ன?

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” (வேதாகமம், யாக்கோபு 5:16)

நம்முடைய பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிடும்படி வேதாகமம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இது சொல்வது போல செய்வது எப்போதும் அவ்வளவு எளிதான விஷயமல்ல, இல்லையா? ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும்படிக்கு அவருடைய வார்த்தை நம்மை அழைக்கிறது. நாம் மனத்தாழ்மையுடனும் விசுவாசத்துடனும் வரும்போது, அவர் ஜெபத்திற்கு பதிலளிப்பார் என்று ஆண்டவர் நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் குணப்படுத்துவதாகவும் வாக்குப்பண்ணியுள்ளார்! ஒரு நீதிமான் ஜெபிக்கும்போது, அவனுடைய ஜெபம் மிகவும் பலனுள்ளதாய் இருக்கிறது!

இன்று, ஒருவருக்கொருவர் ஜெபிக்க நேரம் ஒதுக்க உங்களை அழைக்கிறேன். இந்த நாளை ஒரு பெரிய அன்பின் இணைப்பாக நாம் ஏன் மாற்றக் கூடாது?

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!