நான் ஏற்கனவே வந்துவிட்டேன்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நான் ஏற்கனவே வந்துவிட்டேன்!

என் சகோதரன் ஈசாய் நடந்து நான் பார்த்ததில்லை. நான் பிறப்பதற்கு முன் நடந்த ஒரு விபத்தில் அவர் நடக்க முடியாமல் முடங்கிப்போயிருந்தார், என்னுடைய சிறுவயதிலிருந்தே அவருக்கு உதவ வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.

நான் என் இளமை பருவத்தை அடைந்தபோது, ​​​​யூதர்களுக்கு எதிராக ரோமானியர்கள் செய்த பல அநீதிகளைக் கண்டு, நான் என் வாழ்க்கையின் கடினமான முடிவுகளுள் ஒன்றை எடுத்தேன்: நான்காவது தத்துவம் என அழைக்கப்படும் செலோத்தேக் குழு சகோதரர்களோடு சேருவதற்கு என் சொந்த சகோதரனை விட்டு பிரிய வேண்டும் என்பதுதான்.

என் சகோதரனிடம் எப்படி விடைபெறுவது என்று எனக்குத் தெரியவில்லை, அதனால் நான் செப்பனியா 3:19ன் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன், “ஈசாய், நீ இரண்டு காலில் நிற்கும்போது, ​​நான் மேசியா வந்துவிட்டார் என்று அறிந்து கொள்வேன். அந்த நாளைக் காண நான் சீயோனின் சுதந்திரத்திற்காகப் போராடுவேன்.”

செலோத்தேக் குழு மூலம், நான் இராணுவப் பயிற்சியைப் பெற்றேன். பல வருட பயிற்சிக்குப் பிறகு, எனக்கு ஒரு பணி வழங்கப்பட்டது: எருசலேமில் ரோமானிய நீதியரசர் அந்தஸ்த்தில் வாழ்ந்த ரூப்பு என்ற உயர் அதிகாரி ஒருவரைக் கொல்ல வேண்டும்.

நாங்கள் செயல் திட்டத்தை விரிவாகத் திட்டமிட்டிருந்தோம், நாங்கள் அதைச் செய்யவிருந்த அதே நாளில், நான் பெதஸ்தா குளத்தைக் கடந்து சென்றேன். என் சகோதரனைப் பார்க்க நான் அங்கு சென்றதில்லை, ஏனென்றால் அந்த இடம் ஒரு புறஜாதி வரலாற்றைக் கொண்டிருந்தது மற்றும் செலோத்தேக் குழுவிற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பணியின் போது நான் இறக்க நேரிடலாம் என்பதால், என் சகோதரனிடமிருந்து விடைபெற விரும்பினேன்.

அவர் தனிமையில் வாடியதைப் பார்த்த பின் என் இருதயம் உடைந்தது. சிறிது நேரம் பேசினோம், ஆனால் அவரிடம் விடைபெற்று மீண்டும் எனது பணியில் கவனம் செலுத்தினேன். இறுதிக்கட்ட ஏற்பாடுகளை முடித்துவிட்டு, குறித்த நேரத்தில் பணியைத் தொடங்கினோம். நான் நீதியரசரை தாக்குவதற்காக தயார் நிலையில் இருந்த போது, என் கண்களின் ஓரத்தில் என் சகோதரர் ஈசாயை பார்த்தேன். அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார், அவருடைய உடைமைகளை கையில் சுமந்துகொண்டு!

நான் கனவு காண்பதுபோல் இருந்தது. நான் செய்யவிருந்த அனைத்தையும் மறந்துபோனேன். நான் அவரிடம் நடந்து சென்று அவரை கூப்பிட்டேன். நாங்கள் ஒருவரையொருவர் நோக்கிப் பார்த்தோம், அழுதோம், கட்டித்தழுவிக்கொண்டோம். தீர்க்கதரிசனம் நிறைவேறியது! மேசியா அங்கே இருந்தார், அவர் ஈசாயைக் குணப்படுத்தினார்! என்ன நடந்தாலும் சரி என்று, நான் மேசியாவை தேடி கண்டுபிடிக்க ஆர்வமானேன்.
நான் இயேசுவை சந்திக்கும் வரை ஈசாய் எனக்குக் காட்டிய பாதையில் சென்றேன்… என் வாழ்க்கை இப்போது முன்போல் இல்லை.

என் பெயர் செலோத்தே எனும் சீமோன். நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பரே, உனக்கு எதைக் காட்ட வேண்டும், எந்த நேரத்தில், எந்த வழியில் அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆண்டவர் நன்கு அறிவார். அவரது நேரம் சரியானது. அவர் ஒருபோதும் தாமதிக்கமாட்டார், மேலும் அவருடைய குரலுக்கு கவனம் செலுத்துபவர்களை எவ்வாறு வழிநடத்துவது என்பது அவருக்குத் தெரியும். உன் அன்புக்குரியவர்களுடன் இந்த நாளை அனுபவித்து மகிழு, மேலும் ஆண்டவர் உனக்கு வெளிப்படுத்த விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்து.

நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!