நான் உன்னை மன்னிக்கிறேன்

முகப்பு ›› அற்புதங்கள் ›› நான் உன்னை மன்னிக்கிறேன்

இயேசு என்னை முதன்முதலாக சந்திக்க வந்தபோது, ​​​​என் வாழ்க்கை முற்றிலும் மீட்டெடுக்கப்பட்டது, என்று நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன். எல்லா இருளும் என்னை விட்டு வெளியேறுவதை என்னால் உணர முடிந்தது, அன்றிலிருந்து, இயேசுவைப் பின்பற்றுவதே எனது புதிய வாழ்க்கையாக இருந்தது. இதைவிட மகிழ்ச்சியானது வேறெதுவும் இல்லை!

ஆனாலும், சில பயங்கள் இன்னும் என்னைத் துரத்தியது. ரோமானியப் படைவீரனைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், என் கடந்தகால துஷ்பிரயோகத்தின் ஞாபகங்கள் நினைவுக்கு வரும். அதே போல அது மீண்டும் நடக்குமோ என்ற பயமும் தோன்றும். சாந்தமாக இருந்து இயேசுவை நம்புவதற்கு எனக்குள்ளே ஒரு போராட்டம் இருந்து வந்தது.

இப்படியிருக்க, பிசாசு பிடித்த ஒரு நபரை நாங்கள் சந்தித்த சந்தித்த தருணம் என்னை என் நிலையிலிருந்து விழச் செய்தது. இயேசு பலரையும் குணப்படுத்தி மீட்படையச்செய்திருக்கிறார் (மத்தேயு 4:24). ஆனால் இந்த சமயம் என் கடந்த காலத்திலிருந்த அதே இருளை என்னைச் சுற்றி உணர முடிந்தது. அது ஒரு பாதிக்கும் நினைவு. சந்தேகம் என்னை வாட்டி வதைத்தது… அந்த இருள் மீண்டும் வந்தால் என்ன செய்வது என்று யோசித்தேன்.

ஒரு கணம், இயேசு எனக்குச் செய்ததெல்லாம் வெறும் மாயை என்று நினைத்தேன். “யாரை முட்டாளாக்கினேன்? என்னைப் போன்ற கடந்த காலத்தை கொண்ட ஒரு பெண் மேசியாவைப் பின்தொடர முடியும் என்று உண்மையில் நினைத்தேனோ? விரைவில் அல்லது பின்னர், நான் மீண்டும் இருளில் விழுந்துவிடுவேன், மேலும் போதகரை வெட்கப்படுத்தி விடுவேன்!, அதனால் இதில் எந்த பயனும் இல்லை” என்பது போன்ற எண்ணங்கள் தோன்றின.

நான் குழம்பிப்போய் இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது என நினைத்தேன்.. யாரிடமும் எதுவும் சொல்லாமல், எனக்கு தெரிந்த ஒரே இடமான கப்பர்நகூமில், எனது பழைய வாழ்க்கைக்கே திரும்பலாம் என்று அங்கிருந்து கிளம்பினேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை: பயமும் பதட்டமும் என்னைப் பற்றிக் கொண்டது. இனி இயேசுவோடு இருக்க எனக்கு முற்றிலும் தகுதி இல்லை என்று உணர்ந்தேன்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, பேதுருவும் மத்தேயுவும் என்னைக் கண்டுபிடித்தனர். நான் பரிதாபமான நிலையில் இருந்தேன், ஆனால் அவர்களுடன் கூடாரத்திற்குத் திரும்பும்படி பொறுமையாக என்னை கேட்டுக் கொண்டார்கள். நான் நான் விலகிச் சென்றதையும், கடந்த கால விஷயங்களுக்கு மீண்டும் திரும்பியதையும் எண்ணி வெட்கப்பட்டேன்! இப்போது இயேசுவை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை… அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கை முழுவதையும் முறித்துவிட்டேன்.

இறுதியாக அவரிடம் சென்று மன்னிப்பு கேட்கும் பெலன் கிடைத்தது. என்னைப் பற்றி எனக்குப் பல சந்தேகங்கள் இருந்தன: சத்தியமாக என்னை தகுதியுள்ள ஒருத்தியாக நான் எண்ணவில்லை. அவருடைய வார்த்தைகள் எனக்கு ஊக்கமும் ஆறுதலும் அளித்தன, ஆனால் என்னுள் நான் செய்ததை நினைத்து வெட்கப்பட்டேன்! இறுதியாக, நான் கேட்க வேண்டிய ஒரு விஷயத்தை அவர் கூறினார்: “நான் உன்னை மன்னிக்கிறேன்” என்று. அவ்வளவுதான்! நான் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அழ ஆரம்பித்தேன். அவருடைய மன்னிப்பு என்னுள் பாய்வதை என்னால் உணர முடிந்தது.

அவரது ஆச்சர்யமான அன்பின் காரணமாக, நான் மீண்டும் மீட்கப்பட்டேன், மேலும் இருளின் பொய்களை எனக்குப் புறம்பே தள்ள கற்றுக்கொண்டேன். இப்போது நான் முன்பிருந்தவள் அல்ல, மாறாக நான் ஒரு புதிய மனுஷி என்பதை தெரிந்துகொண்டேன்: ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின(2 கொரிந்தியர் 5:17).

என் பெயர் மகதலேனா மரியாள், எனக்குள் தவறுகள் இருந்தபோதிலும், இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பரே, ஒருவேளை நீயும் சில சமயங்களில் தோல்வியுற்றிருக்கலாம் மற்றும் அவமானத்தில் ஆண்டவரை விட்டு விலகிச் சென்றிருக்கலாம், ஆனால் அவர் உன்னைப் பற்றி எண்ணும்போது வெட்கப்படவில்லை. உன்னை மன்னித்து மீட்டெடுக்க அவர் திறந்த கரங்களுடன் காத்திருக்கிறார். நீ குற்றம் சாட்டப்பட்டு கண்டனம் செய்யப்பட்டதாக உணர்ந்தால், இயேசுவிடம் வார, அவர் உன்னைப் புதுப்பித்து இன்று அவருடைய மன்னிப்பால் உன்னை நிரப்பட்டும். மேலும் உன்னை புண்படுத்தியவர்கள் யாராவது இருந்தால், அவர்களையும் மன்னித்துவிடு. இதைச் செய்ய சரியான காலம் இன்றே!

நீ ஒரு அதிசயமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!