நான் உன்னைக் காண்பவர்

முகப்பு ›› அற்புதங்கள் ›› நான் உன்னைக் காண்பவர்

நான் சீமோன் பேதுருவை மணந்தபோது, அவருக்குள் ஆண்டவர் மேல் விசுவாசமும் அன்பும் நிறைந்த ஒரு நல்ல மனிதரைக் கண்டேன். இருப்பினும், வாழ்க்கை அவருக்கு எப்போதும் எளிதானதாக இருந்ததில்லை. வருடங்கள் செல்ல செல்ல, அவருடைய விசுவாசம் மங்க ஆரம்பித்தது, அதே நேரத்தில் கடன்களும் பிரச்சனைகளும் பெருகின.

நாசரேத்தின் இயேசு, படகு கவிழத்தக்கதான பெரிய மீன்களை பிடிக்க செய்த அதிசயத்தைப் பற்றி அவர் சொன்ன அந்த நாளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது! ஒரு நொடியில் எங்களுடைய பொருளாதார பிரச்சனைகள் மறைந்தன. ஆனால் மிக முக்கியமாக, நான் திருமணம் செய்து கொண்டவர் விசுவாசத்திற்கு திரும்பி வந்தார்.

புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்தால் ஊக்கம் கொண்டிருந்த அவரது கண்களில் நான் நீண்ட காலமாக காணாத தீப்பொறியைக் மீண்டும் கண்டேன். நான் அவரை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், என் கணவரை மீட்டெடுத்ததற்காக சர்வவல்லமையுள்ள தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவளானேன்! ஆண்டவர் எனது கணவரின் வாழ்க்கைக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்று நான் எப்போதும் நம்பினேன்.

ஆனால், இப்போது நான் தான் பிரச்சனையில் உள்ள ஒரு நபராக இருந்தேன். பேதுரு இயேசுவுடன் பல பயணங்களை மேற்கொண்டதால் மட்டுமல்ல, என் தயார், விடாத காய்ச்சலால் பல நாட்களாக உடலை நிலை சரியில்லாமல் இருந்ததால், நான் மிகவும் தனிமையாக இருப்பதுபோல் உணர்ந்தேன். நாட்கள் செல்ல செல்ல என் தாயின் உடல்நிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை.

அப்போதுதான் நான் இறுதியாக அவரைப் பார்த்தேன். இயேசு ஒரு நாள் பேதுருவுடன் வீட்டிற்கு வந்தார், அவர் என் இதயத்தைத் தொட்ட ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார்: “உன்னைக் காண்கிறேன். இவை அனைத்திலும் உனக்கும் பங்கு உண்டு…” அந்த வார்த்தைகளைக் கேட்க நான் எவ்வளவு சிலாக்கியம் பெற்றிருக்க வேண்டும்!

இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவரது மாமியின் கையைப் பிடித்து, “அவளை விட்டு நீங்கு” என்று இரண்டு சிறிய வார்த்தைகளை உச்சரித்தார். காய்ச்சலும் நோயும் அவருடைய அதிகாரத்தின் வல்லமையைத் தாங்க முடியவில்லை. உடனடியாக என் அம்மா, முற்றிலும் குணமடைந்தவராக, என்ன நடந்ததென்று புரியாத நிலையில் படுக்கையிலிருந்து எழுந்தார். (மத்தேயு 8:14-15). விருந்தாளிகள் வரும்போது எப்பொழுதும் செய்வது போல, அவள் விரைவாக எங்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தாள். மேசியா என் தாயை குணப்படுத்தினார்!

இப்போது நான் அவரது கண்களுக்கு தெரியாதவள் அல்ல என்பதையும், அவர் என் குடும்பத்தையும் என்னையும் கவனித்துக்கொள்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டேன். இந்த பூமியில் எனக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை இப்போது நான் அறிந்து கொண்டேன்.

என் பெயர் ஏதேன், சீமோன் பேதுருவின் மனைவி, நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

பார்க்கவும்: அன்பான நண்பரே, நீ ஆண்டவரது கண்களுக்கு தெரியாதவர் போலவும், அவருடைய ராஜ்யம் தொடர்பான அனைத்தும் உன் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பது போலவும் சில சமயங்களில் நீ உணரலாம். ஆனால் அவர் உன்னை நேசிக்கிறார், அவர் உன்னைப் பார்க்கிறார், அவர் உன்னை முழுமையாக அறிவார், உனக்கும் உன் குடும்பத்திற்கும் அவர் ஆசீர்வாதத்தை வழங்கத் திட்டமிட்டிருக்கிறார். நீ என்னுடன் ஜெபிக்க விரும்புகிறாயா? “ஆண்டவரே, யுகத்தின் முடிவு வரையிலும், ஒவ்வொரு நாளும் நீர் என்னுடன் இருக்கிறீர என்பதை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள எனக்கு உதவும். நீர் எங்களுக்காக ஆயத்தம் செய்துள்ள எல்லாவற்றிலும் நானும் என் வீட்டாரும் எப்போதும் உமக்கு சேவை செய்வோமாக. நாங்கள் செய்யும் அனைத்திலும் நீர் மையமாக இருக்கும்படி வேண்டுகிறேன், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”
நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டவர்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!