நானே ஆதியும் அந்தமுமானவர்

முகப்பு ›› அற்புதங்கள் ›› நானே ஆதியும் அந்தமுமானவர்

என் அன்பரே, கடந்த நாட்களில் நாம் வாசித்த ஒவ்வொரு வேதாகமகதாபாத்திரத்தின் சாட்சியையும் நீ பெரிதும் ரசித்திருப்பாய் என்று என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்புகிறேன்.

ஒரு ஆசிரியராக எனக்கு, The Chosen தொடரில் சித்தரிக்கப்பட்ட இந்த கதாபாத்திரங்களின் கதையில் மூழ்கி, அவர்களின் வாழ்க்கை இயேசுவால் தொடப்பட்டு மாற்றப்பட்ட விதங்களை உள்ளூர அனுபவிப்பது ஒரு அசாதாரணமான அனுபவமாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு ஆழமான, யதார்த்தமான கதை சித்தரிப்பே “The Chosen” தொடரை மிகவும் சிறப்புமிக்க ஒன்றாக திகழச்செய்கிறது என்று நான் நம்புகிறேன். வெவ்வேறு கதாபாத்திரங்களின் இருதயங்களை என்னால் சரியாக வர்ணிக்க முடிந்தது என்றும் அவர்களின் கதைகள் உன்னை ஊக்குவித்தது என்றும் நம்புகிறேன்.

இயேசு யார் என்பதையும், உன் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதமான காரியங்களுக்காகவும் உன் அன்பையும் ஸ்தோத்திரங்களையும் அவருக்கு செலுத்து. அவருடைய அன்பு உனக்குள் பெருகட்டும், அவருடைய நாமத்தின் மகிமைக்காக அதே அன்பை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்.

மறந்துவிடாதே: நீ ஒரு அதிசயமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!