நல்ல உறவுமுறைகளுக்கான “அதிசய குறிப்பு”!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நல்ல உறவுமுறைகளுக்கான “அதிசய குறிப்பு”!

நல்ல உறவுகளைக் கொண்டிருப்பதற்கான “அதிசய குறிப்பு” உள்ளதா? இது ஒரு நல்ல கேள்வி!

பதிலை இதில் காணலாம்: ஆண்டவருடனும் நம்முடனும் நாம் வைத்திருக்கும் உறவின் அடிப்படையில் தான் நல்ல உறவுகள் நிறுவப்படுகின்றன.

வேதாகமம் கூறுவது : உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக…..உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக… (மாற்கு 12:30-31).

வேறு சொற்களில் சொன்னால், ஆண்டவர் எனக்காக வைத்திருக்கும் அன்பை நான் பெற வேண்டும், மேலும் என்னை நானே நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்… இதன் வழியாகத்தான் நான் மற்றவர்களை நேசிக்க முடியும்.

அதாவது, உறவுமுறைகளில் 3 படிகள் உள்ளன:

  1. முதலாவது, ஆண்டவருடன் நீங்கள் வைத்திருக்கும் உறவு,
  2. அதன்பின், நீங்கள் உங்களோடு வைத்திருக்கும் உறவு,
  3. இறுதியாக, மற்றவர்களுடன் நீங்கள் வைத்திருக்கும் உறவு!

ஆண்டவருடனான உங்கள் உறவிலிருந்துதான் அனைத்தும் பாய்கிறது (முதல் படி). அவருடனான உங்கள் உறவு சரியாக நிறுவப்படவில்லை என்றால், மற்றவர்களுடனான உங்கள் உறவுகளில் சங்கடங்களுக்கு வழிவகுக்கும். இதிலிருந்து தெளிவாக தெரிவது என்னவென்றால்… நாம் ஏற்கனேவே பெற்றுக்கொண்டவைகளை மட்டுமே நம்மால் கொடுக்க இயலும்.

இதனால்தான், ஆண்டவர் உங்கள் மீது வைத்துள்ள அன்பை விசுவாசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் உங்களை அழைக்கிறேன். உங்களுக்கு தேவையான எவ்வளவு அன்பையும் அவரால் கொடுக்க முடியம். 

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!