நன்றியோடு இருப்பதை ஒரு பழக்கமாகிக்கொள்வோம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நன்றியோடு இருப்பதை ஒரு பழக்கமாகிக்கொள்வோம்!

உங்களை பற்றி எனக்கு தெரியாது, அனால் சில நேரங்களில் சில விஷயங்கள் என் கோபத்தை தூண்டிவிடும், அதாவது வெறுப்பும் எரிச்சலையும் உண்டாக்கும். இவ்வாறு நடக்கும் போது நான் அதை எப்படி மேற்கொள்ளுவேன்?

நான் என்னுடைய உணர்ச்சிக்கு வசப்படாமல்  நன்றியோடு இருப்பதை மட்டும் தேர்ந்துகொள்ள விரும்புகிறேன். குற்றம் சாட்டுவதை காட்டிலும் , என் முழுமனதோடு, ஆண்டவர் எனக்கு கொடுத்திருக்கும் அத்தனை நன்மைக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துவதையே நான் தேர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

உதாரணத்திற்கு, உங்களுடைய குழந்தையோ, வாலிப பிள்ளையோ அல்லது வாழ்க்கை துணையோ நீங்கள் விரும்பியவாறு நடந்துகொள்ளவில்லை  என்று வைத்துக்கொள்வோம். ஆனாலும் அவர்களுக்குள் நீங்கள் பாராட்டுகின்ற வேறு பல நல்ல விஷயங்கள் உண்டென்றால், அந்த நல்ல விஷயங்களுக்காக நன்றியோடு இருங்கள்! அவர்களிடம் பிடிக்காதவற்றை பற்றி நோட்டமிட்டு சிந்திக்க வேண்டாம்.

மனிதனுடைய இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும் என்று வேதம் சொல்லுகின்றது (லூக்கா 6:45) 

நீங்கள் உங்கள் இதயத்திற்கு தீமையான எண்ணங்களை மட்டும் ஊட்டினால் அது நிச்சயமாக உங்கள் வாயின் வார்த்தைகளில் வெளிப்பட்டு, சூழ்நிலையை இன்னும் மோசமாக்கி விடும்.

ஆனால், ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் நன்மைகளுக்காக நாம் ஒவ்வொருநாளும் நன்றியோடு வாழும்போது, ​​ஒரு நல்ல தந்தையைப் போலவே, இன்னும் அதிக நன்மைகளை நம் வாழ்வில் பெறுக செய்வார்!

இன்று, நன்றியுணர்வோடு வாழ தீர்மானம் செய். அதை உன் வாழ்க்கையில் ஒரு வழக்கமாக்கிக்கொள்! ஒவ்வொரு நாளையும் நன்றியோடு ஆரம்பித்து நன்றியோடு முடித்து நிறைவுசெய். உன்னை வெறுப்பூட்டும் விஷயங்களுக்கு உன் சிந்தனையில் இடம் கொடுக்காதே!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!