நன்மையை எதிர்பார்த்திரு…

முகப்பு ›› அற்புதங்கள் ›› நன்மையை எதிர்பார்த்திரு…

நாம் எதை குறித்து பயப்படுகிறோமோ அதை நாம் ஈர்க்கின்றோம். சுவிசேஷம் இவ்வாறு கூறுகிறது : “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.” (யோபு 3:25)

நீங்கள் கெட்ட செய்திகளை நினைத்து அஞ்சுகிறீர்களா? அது வருகிறது. நோய்வாய் பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறீர்களா? அது நடக்கிறது. அன்றாட செலவுகளை யோசித்து அஞ்சுகிறீர்களா? கட்டணம் செலுத்த வேண்டிய ரசீது அஞ்சல் பெட்டியில் வந்தடைகிறது. ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் வேதம் இப்படி சொல்கிறது “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது”.

சுவிசேஷம் ஏன் இதைப் பற்றி பேசுகிறது? ஆண்டவருடைய வார்த்தை நம்மை ஊக்குவிக்கிறது. கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறக்கும் வல்லமையமான வாழ்க்கையை வாழ்வதற்கு நமக்கு தேவையான திறவுகோல்களை கற்பிக்கிறது. யோபுவில் இருந்து நாம் வாசித்த இந்த வசனத்திலிருந்து  நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால்: “பயம் எதிரிக்கு ஒரு கதவைத் திறக்கிறது”. எனினும், இதை  சிந்தியுங்கள்….விசுவாசம் பயத்திற்கு எதிரானது! பயத்திற்கு முற்றிலும் மறுதலையானது. நாம் நம்பியிருக்கும் நன்மைகள் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்பது.

நான் எதற்க்காக காத்திருக்கிறேனோ… அதுவே எனக்கு நடக்கிறது. நான் எதை எதிர்பார்த்திருக்கிறேனோ,  எதை தியானிக்கிறேனோ, எதை மனதில் வைத்து சிந்திக்கிறேனோ, அதையே ஈர்க்கிறேன். அதனால், நான் நன்மையை எதிர்பார்த்திருந்தால், நன்மையையே ஈர்த்துக்கொள்வேன். இதுமட்டுமின்றி, கடவுளுடைய வார்த்தையை (அவருடைய நன்மையையும் இரக்கத்தையும் நினைவுபடுத்தும் வார்த்தையை) அனுதினமும் உட்கொள்ளும் பொழுது, நன்மையானவற்றை நான் எனக்குள் ஈர்த்துக்கொள்கிறேன்.

நீங்கள் ஒருவேளை என்னிடம் இவ்வாறு சொல்லலாம், “எரிக், இது ரொம்ப எளிது, மிகவும் சுலபமானது”. உண்மைதான், ஆனால் இது வேதம் சொல்வது. மிகவும் பயனுள்ள தீர்வுகள் எப்போதும் சிரமமானவை அல்ல. 🙂 நம் சுவிசேஷத்தின் எளிமையை நான் மிகுதியாய் நேசிக்கிறேன்!

இன்று உங்கள் பயத்தையும் அதனால் வரும் எல்லா கேட்ட சிந்தனையையும் கைவிட்டு, இன்று காலை நீங்கள் பெற்று கொண்ட ஆண்டவரின் புதிய  இரக்கங்களின் மேல் உங்கள் கண்களை பொருத்திக்கொள்ள உங்களை ஊக்குவிக்கிறேன்.

ஆசீர்வதிக்கப்பட்டிருங்கள், உங்களை மிகவும் பாராட்டுகிறேன், உங்களுக்கு நன்மை கிடைக்க நான் எதிர்பார்த்திருக்கிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!