தொடர்ந்து முன்னேறு!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்” (வேதாகமத்தில் சங்கீதம் 23:4ஐ பார்க்கவும்)
ஒருநாள் நான் இஸ்ரவேல் நாட்டிற்கு சென்றிருந்தபோது, அங்கே உள்ள நாடோடி ஒருவர், சூரிய ஒளி ஒருக்காலும் நுழையாத ஒரு குறுகிய பள்ளத்தாக்கை எனக்குக் காண்பித்தார். அந்த மனிதர், “பட்டப்பகலிலும் இப்பள்ளத்தாக்கில் வெளிச்சத்தைக் காண முடியாது. இது உண்மையிலேயே ஒரு மரண பள்ளத்தாக்கு. இங்கே ஒரு விபத்து நடந்தால், ஒருவரும் உங்களைக் கண்டுபிடிக்க முடியாது” என்று சொன்னார், அது எப்படிப்பட்ட பள்ளத்தாக்கு என்பதை நான் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி, “இங்கே தொலைபேசித் தொடர்பும் கிடையாது” என்று சொன்னார்.
இவ்விதமான பள்ளத்தாக்கை நாமும் சில நேரங்களில் கடக்க வேண்டி இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்றே தெரியாத இருள், எப்படித் தப்பிப்பது என்று தெரியாத சூழ்நிலை காணப்படுகிறது, பயம் நம்மை மேற்கொள்ளுகிறது, ஏன் தேவனோடு உள்ள தொடர்பு கூட துண்டிக்கப்பட்டதாக நமக்குத் தோன்றலாம்.
இச்சூழலில் நாம் என்ன செய்வது என்ற ஒரு ரகசியத்தை தாவீது சங்கீதம் 23ல் நமக்கு சொல்லுகிறார்… தொடர்ந்து முன்னேறு!
“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்” (வேதாகமத்தில் சங்கீதம் 23:4ஐ பார்க்கவும்)
ஸ்டீபன் என்னும் எனது நண்பனுக்கு தேவன் இந்த வசனத்தின் மூலமாகதான் பேசினார். அவனது சிறுநீரகங்களில் ஒன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அது இப்பொழுது அவனுடைய மூளையிலும் பரவத் தொடங்கிவிட்டது என்றும் மருத்துவர்கள் அவனுக்குச் சொல்லியிருந்தனர். அக்கட்டியை அகற்ற மூளையிலும், சிறுநீரகத்திலுமாக இரண்டு அறுவை சிகிச்சைகள் அவனுக்குச் செய்ய வேண்டியிருந்தது. அப்பொழுது தேவன் இந்த வசனத்தின் மூலமாக அவனோடு பேசினார்.”இது மரண பள்ளத்தாக்கு தான், ஆனால் தேவன் இதில் நடக்க சொல்லுகிறார். எனவே மருத்துவர்களின் அறிக்கையும் சூழ்நிலையும் எப்படி இருந்தாலும் சரி, நான் தேவனை நம்பி முன்னேறுகிறேன்” என்று அவன் எங்களிடம் சொன்னான்.
நாங்கள் ஜெபித்தோம், தேவன் அற்புதம் செய்தார். அந்த அறுவை சிகிச்சை நிபுணர், “சிறுநீரகத்தின் அந்தப் புற்றுநோய் உங்கள் மூளையையும் தாக்கி உள்ளது. ஆனால் மூளையில் உள்ள கட்டி புற்றுநோய் உடையதாக இல்லை எனவே அதனை அகற்ற வேண்டிய அறுவை சிகிச்சை அவசியமில்லை” என்று சொல்லி அதிசயித்தார்.
ஸ்டீபன் தொடர்ந்து முன்னேறி சரியான காரியத்தை செய்தார். இன்றும் நலமாக இருக்கிறார்; அவருடைய குடும்ப பொறுப்புகள் மற்றும் வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார்.
தேவனை நம்புவதை விட்டுவிடாதே.
தொடர்ந்து முன்னேறு!
நீ தொடர்ந்து நடக்கும்போது, இருண்ட பள்ளத்தாக்கிலிருந்து நிச்சயமாக ஒரு நாள் வெளியே வருவாய் என்று நான் நம்புகிறேன்.