தொடர்ந்து கனவு காணு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தொடர்ந்து கனவு காணு!

“ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.” எபேசியர் 2:10

“நீ வளர்ந்தபின் என்னவாக இருக்க விரும்புகிறாய்?” இந்த கேள்வியை கேட்காதவர் உண்டோ?

இந்தக் கேள்வியை நீ கேட்டிருந்தால் அல்லது அதற்க்கு பதிலளித்திருந்தால், பதில் ஒருபோதும், “ஒன்றுமில்லை-நான் ஒன்றும் ஆகப் போவதில்லை. நான் என் வகுப்பில் மோசமானவனாக இருப்பேன். எல்லாவற்றிலும் தோல்வியுற்றவனாக நான் இருக்க விரும்புகிறேன்!” என்று நிச்சயமாக இருந்திருக்காது.

குழந்தைகளுக்கு பெரிய கனவுகள் காணும் இந்த அபாரமான திறன் உள்ளது… மிக பெரிய கனவுகள். ஆழமாக…மிக ஆழமாக நம்பும் குணம். நீ எப்படி? நீ கனவு காணும்போது வானமே எல்லையா? அல்லது காலப்போக்கில், ஏமாற்றம், உன் மீது ஒருவர் அல்லது மற்றொருவர் பேசும் வார்த்தைகள், இவற்றால் உன் வாழ்க்கைக்கு பெரிய கனவுகள் காண்பதை நிறுத்திவிட்டாயா?

ஆண்டவருடைய பரிசுத்த ஆவி உனக்குள் இருக்கிறது. அவருடைய படைப்பாற்றல், உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை உன் வாழ்க்கையில் தருவதற்கு அவர் விரும்புகிறார். இதன் மூலம் நீ செய்ய பிறந்ததை உன்னால் செய்ய இயலும். மனித வளம், தகவல் தொழில்நுட்பம், குழந்தைகளை பராமரிப்பது, அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது, அல்லது மருத்துவம், படைப்புக் கலைகள், வீட்டை நிர்வகித்தல், விற்பனை, சமூக சேவைகள் போன்ற எந்த திறமை உன்னிடம் இருந்தாலும் அது ஆண்டவர் உன்னிடம் ஒப்படைத்த பரிசு!

அவர் உன்னை “தவறாக” அமைக்கவில்லை. அவர் உன்னை நம்புகிறார், அவர் உன்னை கணக்கில் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு அடியிலும் ஆண்டவர் உன்னை வழிநடத்துகிறார். அவர் உனக்கு மிக அருகில் வசிக்கிறார். நீ குறிப்பிடத்தக்க எதையும் செய்ய மாட்டாய் என்று சொல்லும் அந்த குரலைக் கேட்காதே – அது ஒரு பொய்!

உனக்கு ஒரு பெரிய ஆண்டவர் இருக்கிறார், எனவே நீ மீண்டும் பெரிய கனவு காண உனக்கு அனுமதி உண்டு. அவருடைய ஆவியின் மீது சார்ந்துகொள், அவருடைய முகத்தைத் தேடு, மேலும் அவர் உனக்காக முன்கூட்டியே ஆயத்தப்படுத்திய செயல்களை நீ சாதிக்கும்போது அவரை மகிமைப்படுத்து!

என்னுடன் ஜெபி: “அப்பா, நீர் எனக்காக அற்புதமான கனவுகளைக் கொண்டிருப்பதையும், நீர் அவற்றைக் கைவிடவில்லை என்பதையும் நான் அறிவேன். ஆனால் காலமாற்றம், ஒத்திவைக்கப்பட்ட நம்பிக்கை, மக்களின் வார்த்தைகள் மற்றும் பிற விஷயங்கள் இந்த கனவுகளை என் வாழ்க்கையில் மங்கச் செய்தன. இன்று, நான் மீண்டும் கனவு காண என்னை அனுமதிக்கிறேன்! நான் உன்னை நம்புகிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!