தேவன் மகத்தான காரியங்களைச் செய்கிறார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் மகத்தான காரியங்களைச் செய்கிறார்

சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் நெகிழ்ந்துபோக வைத்தது. அதை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்…

“மின்சாரம் தாக்கியதால் 30 வினாடிகள் அதனுடன் போராடின 26 வயது இளைஞன் அஜய்யை சந்தித்துவிட்டு நான் திரும்பி வந்தேன். அவன் என்னிடம் சொன்னதாவது : அவன் விரக்தியில், தன் இரண்டு கைகளாலும் தான் பிடித்திருந்த அந்தக் கேபிள் கம்பியிலிருந்து தன்னைப் பிரித்துவிடும்படி தேவனிடத்தில் வேண்டினான். திடீரென்று, அவனது கைகள் திறக்கப்பட்டு, அவன் மின்னழுத்தத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு தரையிலே விழுந்தான்.

அந்த 30 வினாடிகளில், அவனது வாழ்க்கையில் நடந்த அநேக சம்பவங்கள் ஒரு மின்னலைப்போல் அவனது நினைவில் வந்து சென்றதாகவும், தேவனைச் சந்திக்க ஆயத்தமாக இல்லாதிருந்ததை தான் உணர்ந்ததாகவும் என்னிடம் சொன்னான். தேவனைப் பற்றியும் அவரது திட்டங்களைப் பற்றியும் எதையும் முற்றிலும் அறிந்திராத அவன், எப்படியோ ஒரு குறிப்பிட்ட போதகரின் வார்த்தைகளை விரும்பத் தொடங்கினான். இந்த போதகர் தனது மின்னஞ்சலை எப்படியோ கண்டுபிடித்து, அந்த நேரத்திலிருந்து ஊக்கமளிக்கும் மின்னஞ்சல் அவனுக்கு அனுப்பியதாகவும் என்னிடம் கூறினான். ‘இந்தப் போதகர் யார்?’ என்று நான் அவனிடம் கேட்டேன். ‘ஆம்… இணையத்தில்…எரிக் அவர்களா?’ என்று அவனிடம் கேட்டேன். ஆமாம்!’ என்று பதிலளித்தான். ‘ஆனால் அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்?’ என்று என்னிடம் கேட்டான். ‘உண்மையில், எனக்கு எரிக்கை நன்றாகத் தெரியும்…’ என்று சொன்னேன்.

இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், எரிக், உங்களுடைய ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி தியான மின்னஞ்சல் இணையவெளியில் ஊடுருவிச் சென்று, தேவனால் அழைக்கப்பட்ட ஆத்துமாக்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது அதற்குத் தெரிகிறது. அஜய்யின் மிகப்பெரிய குறிக்கோள் ஒரு நாள் உங்களை சந்தித்துப் பேச வேண்டும் என்பதுதான்… அஜய்யை பொறுத்தவரை, விபத்து நடந்தது முதல் அவனை வழிநடத்தியவர் நீங்கள்தான். உலகத்தில் நீங்கள் மட்டும்தான் அவனுக்கு உதவி செய்ய வந்தீர்கள் என்பதைப்போல அவன் உணர்கிறான்…

இந்த சந்திப்பு என்னை மிகவும் நெகிழச் செய்தது, தேவன் அவனுடைய வாழ்வில் செய்துகொண்டிருந்த கிரியையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கையில், அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவனது வேறு இரண்டு நண்பர்களும் ஆச்சரியத்தில் உறைந்துபோயினர். நாங்கள் புறப்படும்போது, ஆண்டவரிடம் நேராக வழிதடத்தப்பட வேண்டும் என்பது தெரிந்தாலும், அவரிடத்திற்குத் தன்னை வழிநடத்தக்கூடியவர்கள் யாரும் இல்லை என்று அஜய் என்னிடம் கூறினான். அவனுக்குத் இருந்ததெல்லாம்… மெய்நிகர் போதகர், எரிக் அவர்கள் மட்டுமே.

அன்புள்ள எரிக் அவர்களே, சகோதரர் அஜய்யை உங்கள் சார்பிலும் உங்களுக்காகவும் நான் கவனித்துக்கொள்ளப்போகிறேன். இரட்சிப்பிற்கு ஏற்ற பசுமையான மேய்ச்சலுள்ள நிலங்களில் அவனை வழிநடத்த என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன். அஜய்க்காகவும், எனக்காகவும், அவனுடைய நண்பர்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். ஒரு மிகப்பெரிய அறுவடைக்கான ஆரம்பமாக அஜய் திகழட்டும்! ஜான், கனடா

அஜய்க்காக தேவனுக்கு மகிமை உண்டாவதாக, ஜான், உங்கள் அன்பு நிறைந்த இதயத்திற்காக நன்றி. இந்த இளைஞர்களுக்காக ஜெபிப்போம். அதோடு கூட, அநேகருக்குள் மினசாரம் போல ஜீவன் பாய்ந்தோடி, “அனுதினமும் ஒரு அதிசயம்” மூலமாக ஆண்டவரிடம் அவர்கள் ஈர்க்கப்பட வேண்டுமென்று என்னுடன் சேர்ந்து ஜெபி.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!