தேவன் தம்மை உனக்கு வெளிப்படுத்த விரும்புகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் தம்மை உனக்கு வெளிப்படுத்த விரும்புகிறார்!

“ஆண்டவரே, உம்மை எனக்கு வெளிப்படுத்தும், உம்மை வெளிப்படுத்தும்… நான் உம்மை அறிய விரும்புகிறேன்!” என்று நீ ஏற்கனவே இந்த ஜெபத்தை ஏறெடுத்திருக்கிறாயா?

நீ அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. நீ கடந்து செல்லும் சூழ்நிலைகளின் மூலம் அவர் தம்மை உனக்கு வெளிப்படுத்துகிறார். நீ விசேஷித்த விதத்திலும், தனிப்பட்ட முறையிலும் அவரை மிகவும் ஆழமாகவும் நெருக்கமாகவும் அறிந்துகொள்ள உனக்கு உதவும்படிக்கு, நீ சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் பயன்படுத்துகிறார்.

  • நீ கடினமானதும், பேரழிவு நிறைந்ததும், நிதி நெருக்கடியானதுமான ஒரு நிலைமையில் இருப்பதாக உணர்வாயானால், ஆண்டவர் தம்மை, வழங்குகின்ற ஆண்டவராக உனக்கு வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதை அறிந்துகொள். (வேதாகமத்தில் ஆதியாகமம் 22:14 பார்க்கவும்)
  • வியாதி உன் அறைக் கதவைத் தட்டுகிறது என்றால், அவர் தன்னைக் குணப்படுத்தும் தேவனாக வெளிப்படுத்த விரும்புகிறார்… (வேதாகமத்தில் யாத்திராகமம் 15:26 ஐப் பார்க்கவும்)
  • மேற்கொள்ள முடியாத அளவுக்குப் பெரியதாகத் தோன்றும் போராட்டம் இருக்கிறதா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உனக்கு வெற்றியைத் தருபவர் அவரே (வேதாகமத்தில் 1 கொரிந்தியர் 15:57 ஐப் பார்க்கவும்)

ராஜா இங்கே இருக்கிறார்! அவர் உன் வாழ்வில் இருக்கிறார்… உன் பணியிடத்தில் இருக்கிறார், உன் வாகனத்தில் இருக்கிறார், உன் வீட்டில் இருக்கிறார்.

ஆண்டவர் உன்னை ஒதுக்கி வைப்பதில்லை. அவர் உன்னை நிராகரிப்பதில்லை. மாறாக, உன்னை இரட்சிக்கும்படிக்குத் தம்முடைய கரத்தை உனக்கு நேராக நீட்டுகிறார்!

அவரது கரங்கள் விரிவாய்த் திறந்திருக்கின்றன. அவரது இருதயம் உன் மீதான அன்பால் நிரம்பி வழிகிறது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!