தேவன் தந்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் உன்னுடையவைகள்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய அனைத்து காலங்களுக்கும் நம் வாழ்விற்குத் தேவைப்படும் அநேக வாக்குத்தத்தங்கள் பரிசுத்த வேதாகமத்தில் இருக்கின்றன. அந்த வார்த்தைகள் சிறந்தவைகளும் மிகவும் விலையேறப்பெற்றவைகளுமாய் இருக்கின்றன. தேவன் மிகவும் நல்லவர். நீ அவர் மேல் உன் நம்பிக்கையை வைத்திருக்கிறபடியால், அவர் உனக்கு சகல நன்மைகளையும் தர விரும்புகிறார்!
“உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!” (பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 31:19ஐ பார்க்கவும்)
தேவன், உன் பொருளாதாரத் தேவைகளையும் ஆவிக்குரிய தேவைகளையும் சந்திக்க விரும்புகிறார்; உன் நோய்களை குணமாக்க விரும்புகிறார்; உன் எல்லா நிலைகளிலும் உனக்கு உதவ விரும்புகிறார்; நீ சந்திக்கும் கடினமான சூழல்கள் ஒவ்வொன்றிலும் அவர் உன்னோடு இருக்க விரும்புகிறார்; உன் ஜெபங்களுக்குச் செவி கொடுத்து அவற்றிற்கு பதில் அளிக்க விரும்புகிறார்; தேவைப்படும் நேரங்களில் உனக்கு வழி காட்ட விரும்புகிறார்; உன் ஏக்கங்கள், விருப்பங்கள், உணர்வுகளைப் பார்த்துக்கொள்ள விரும்புகிறார்; எல்லாவற்றிற்கும் மேலாக தம் அன்புப் பரிசாகிய நித்திய ஜீவனை அளிப்பதாக இன்று உனக்கு வாக்களிக்கிறார்…
மகிழ்ந்து களிகூரு, ஏனெனில் உனக்கு வாக்களிக்கப்பட்ட வார்த்தைகள் எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளாய் நிறைவேறும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
“… தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.” (பரிசுத்த வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 1:20ஐ பார்க்கவும்)
இந்தப் பாடல் அதை நமக்கு (https://youtu.be/YAjKajAdSdo?si=FOs0tWuuY0KL5pzE) நினைவூட்டுகிறது:
“வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்”
உன்னை அழைத்து, உனக்குத் தம்முடைய பெரிதும், உயர்ந்ததுமான வார்த்தைகளைத் தந்த தேவன், அதை உன் வாழ்வில் நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார்.