தேவன் சகலத்தையும் அறிவார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் சகலத்தையும் அறிவார்

“கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது. அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.” (வேதாகமத்தில் எசேக்கியேல் 37:1-3ஐப் பார்க்கவும்)

ஒருவேளை இப்போது நீ மரணம் மற்றும் துக்கம் என்ற பள்ளத்தாக்கையும், தனிமை, துன்பம், உலர்ந்த எலும்புகள் என்பன போன்ற வனாந்திரத்தையும் கடந்து சென்றுகொண்டிருக்கலாம். “அது மரித்து விட்டது, உலர்ந்துவிட்டது, அதில் உயிர் இல்லை!” என்று நீ நினைக்கலாம்.

இந்த வேத வாசிப்புப் பகுதியில், தேவன் எசேக்கியேலிடம்: “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று ஒரு கேள்வி கேட்கிறார். அதைப் போலவே, அவர் இன்று உங்களைப் பார்த்துக் கேட்கிறார், “இந்த எலும்புகள் மறுபடியும் உயிரடையும் என்று நீ விசுவாசிக்கிறாயா? என்னால் ஒரு அதிசயம் செய்ய முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா?”

தேவன் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்கும்போது, ​​அவருக்கு ஏற்கனவே பதில் தெரியும். எசேக்கியேலைப் போலவே, “தேவரீர், அதை அறிவீர்!” என்று பதிலளிக்க நீ அழைக்கப்பட்டிருக்கிறாய். நீ துக்கம் எனும் பள்ளத்தாக்கைக் கடந்துகொண்டிருக்கிறாய் என்பது தேவனுக்குத் தெரியும்.

இயற்கையாகவே, நாம் குறையுள்ளவர்களாய் இருக்கிறோம், நம் பார்வை குறைவானதாய் இருக்கிறது, நம் புரிதலும் குறைவாகவே இருக்கிறது… சகலமும் நம்மில் குறைவுபட்டிருக்கிறது! ஆனால் உன் சூழ்நிலையில் தேவன் இன்னும் குறுக்கிடாமல் இருக்கிறார். ஒருவேளை நீ கேட்ட செய்தி கெட்டதாக இருக்கலாம், நியாயத்தீர்ப்பு அநீதியாக இருக்கலாம், நோய் பயமுறுத்துவதாக இருக்கலாம், ஆனால் உன் நிலைமையை தேவன் நன்கு அறிவார். உன் வனாந்திரத்தையும், தனிமையையும், வறட்சியையும் அவர் அறிவார். நம்பிக்கையே இல்லை என்பதுபோல உனக்குத் தோன்றினால், நான் இதைச் சொல்கிறேன்… உன் புரிதலை மிஞ்சும் நம்பிக்கையும், எதிர்காலமும், தெய்வீகத் திட்டமும் உனக்கு நிச்சயம் உண்டு!

உன் சூழ்நிலையைக் குறித்து இதை அறிவி: “கர்த்தாவே, நீர் சகலத்தையும் அறிவீர். எனது நிலைமையைப் பற்றிய உமது பார்வை ஆசீர்வாதங்கள், அதிசயங்கள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்ததாக இருப்பதால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் உம்மை விசுவாசிக்கிறேன்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!