தேவன் உன் பாதையை பிரகாசிப்பிக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் உன் பாதையை பிரகாசிப்பிக்கிறார்!

இன்றோ அல்லது பின்னொரு நாளிலோ, ஒவ்வொரு நபரும் தன் வாழ்க்கையில், ஒரு இருவழிச்சந்தியில் நின்று தீர்மானம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர். இது ஒரு தொழில்துறை வாய்ப்பாக இருக்கலாம், தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பாக இருக்கலாம், அல்லது வேறு ஏதாவதாகக் கூட இருக்கலாம்…

இந்தத் தருணங்கள் வரும்போது, ​​தவறாகத் தேர்வு செய்துவிடுவோமோ என்று அடிக்கடி நாம் பயப்படுவதை உணரலாம். ஆனால் தேவனுடைய வார்த்தை நமக்கு மிகவும் அற்புதமானதும், தீர்க்கமானதுமான கட்டமைப்பை அளிக்கிறது. இதோ, அது இவ்வாறு சொல்கிறது… “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்.” (வேதாகமத்தில் 2 சாமுவேல் 22:29ஐப் பார்க்கவும்)

மற்றவர்களைவிட நம் எதிர்காலத்தை நன்கு அறிந்தவர் தேவனே! நீ தேர்ந்தெடுப்பதன் அடிப்படையில் உன்னுடையதாக மாறும் பயணத்தை அவர் முன்னறிவிப்பார். அதனால்தான், அவரைக் கலந்தாலோசிப்பதும், ஜெபிப்பதும், அவருடைய சித்தத்தை அறியும்படி அவரை உண்மையாகத் தேடுவதும் மிகவும் முக்கியமாகும்… உன் ஆசைகள் அல்லது விருப்பங்களின்படி அல்ல, மாறாக அவர் அன்போடுகூட உனக்கு எது சிறந்தது என்று நினைக்கிறாரோ, அதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்!

இருள்சூழ்ந்த இரவிலும் கூட, தேவன் உன்னைப் பிரகாசிப்பித்து வழிநடத்துபவராய் இருக்கிறார். நீ செல்ல வேண்டிய பாதையை… அதாவது, உனக்காக அவர் தேர்ந்தெடுத்த பாதையை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டுவார். மற்ற நபர்களைவிட உன்னை அதிகமாய் நேசிப்பவரும், உன்னை நன்கு அறிந்தவருமான தேவன், தம்முடைய வார்த்தையாலும், தம்முடைய பரிசுத்த ஆவியினாலும் உன்னை வழிநடத்துவார். அவர் மீதான விசுவாசத்துடன் முன்னேறிச்செல், சிறந்ததைத் தேர்வுசெய், உன் வாழ்க்கைக்காக அவருடைய சித்தம் என்ன என்பதை அறிந்து அந்தப் பாதையில் நட!

சாட்சி: “உங்கள் செய்தியை வாசித்து எனது நாளைத் தொடங்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு நாளும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அது உண்மையிலேயே அந்த நாளின் எனது மனநிலையை நிலைப்படுத்துகிறது. எனது அந்த நாளில் தேவன் எனக்காக என்ன திட்டமிட்டுள்ளார் என்பதைக் குறித்து அறிந்துகொண்டு, சிறந்த முடிவுகளை எடுக்க இது எனக்கு உதவுகிறது என்று நான் நம்புகிறேன்…” (டோனி)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!