தேவன் உன் பழக்கங்களை மாற்ற விரும்புகிறாரா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் உன் பழக்கங்களை மாற்ற விரும்புகிறாரா?

பழக்கவழக்கங்கள் நன்மை பயக்கும் – அவை நம் வாழ்க்கைக்கு கட்டமைப்பை ஏற்படுத்தலாம், நம் வாழ்க்கையை ஒழுங்கமைக்க உதவும் கட்டமைப்பை அவைகளால் வழங்க முடியும். ஆனால் “பழக்க தோஷம்” என்ற சொற்றொடரானது, சில நேரங்களில் நாம் வழக்கமாகச் செய்வதைக் கருத்தில் கொள்வதில்லை என்பதைக் குறிக்கிறது… அதாவது, ஒவ்வொரு நாளும் அந்த செய்கைகளை மறுபரிசீலனை செய்யாமல், மீண்டும் மீண்டும் செய்கிறோம் என்பதைக் குறிக்கிறது!

சமீபத்தில், நான் தினமும் சென்றுவரும் சாலையை தவிர்த்து, பாதையை மாற்றி வேறு வழியில் செல்ல முடிவு செய்தேன்… வழக்கமாகச் செல்லும் தெருவைப் போலவே ஒரு தெருவைக் கண்டுபிடித்தேன், அது அதிக இரைச்சல் இல்லாமலும், பரபரப்பான கூட்ட நெரிசல் இல்லாததாகவும் இருந்தது! இது நான் சென்றடைய வேண்டிய இடத்தை மிக விரைவாகச் சென்றடைய உதவியது. நான் அந்த வழியில் செல்வதைப் பற்றி ஒருபோதும் யோசித்ததில்லை!

தேவனுடனான உன் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. உன் பழக்கங்களை மாற்றுவதன் மூலம், தேவனிடத்தில் நெருங்குவதற்கும், ஜெபம் செய்வதற்கும் அல்லது அவருக்கு ஊழியம் செய்வதற்கும் ஒரு புதிய வழியை, ஒருவேளை முன்பைவிட சிறந்த வழியை நீ அனுபவிக்கலாம்!

இன்றைய நாள் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும் என்று நான் உனக்காக ஜெபிக்கிறேன். உன் பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் புதிதாக்கப்படுதல் உனக்கு எளிதில் நிகழக்கூடும், மேகாவும், பிரான்சிஸும் தங்கள் சாட்சிகளில் பகிர்ந்துகொண்டதை கீழே காண்போம்:

  • “எரிக் அவர்களே, நான் நம்பிக்கையை இழந்து முயற்சியை விட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த இந்த நேரத்தில் என்னை உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. இன்றைய ஆசீர்வாதமானது உண்மையில் எனக்கு நடந்த ஒரு அதிசயம். அது என் சிந்தனை முறையை முற்றிலும் மாற்றியமைத்துவிட்டது. இப்போது, ​​நான் வெற்றிபெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறபடியே, நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்… இது நிச்சயம்…” மேகா
  • “நான் ஜெபிப்பதையும் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதையும் முற்றிலும் நிறுத்தி கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி தியான மின்னஞ்சலை நான் பெற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து, எல்லாமே மாறிவிட்டது. இப்போது, ​​நான் மீண்டும் திருச்சபைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன், ஒவ்வொரு நாள் காலையிலும், நானே தனியாக வேத தியான நேரத்தை செலவிட்டு, ஜெபிக்கிறேன் மற்றும் என் இரட்சகரைத் துதிக்கிறேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்காக நன்றி!” பிரான்சிஸ்

நான் ரோமர் 12:2வது வசனத்தின் மூலம் உன்னை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!