தேவன் உன் இருதயத்தை வடிவமைக்கட்டும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் உன் இருதயத்தை வடிவமைக்கட்டும்

அருமை!

பானை வடிவம் பெற்றவுடன், அது உலர்த்தப்படும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும், இதற்கு சில நாட்கள் ஆகும். குயவர்கள் அதை சில நாட்கள் நிழலில் வைத்து உலர்த்திவிட்டு, அதற்குப்பிறகு வெயிலில் காட்டுவார்கள். (சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் சில குவளைகளில் விரிசல் விழுந்துவிடும்.)
“குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்.” (எரேமியா 18:4)

பானையைச் சுடும் கட்டத்தின்போது,​ குயவன் அடுப்பை சூடாக்கி, போதுமான அளவு அதிகபட்ச வெப்பநிலையை அடையும்வரை, குவளையை வெப்பத்திற்கு உட்படுத்துகிறான்.

குவளை அடுப்பில் இருக்க வேண்டிய கால அளவானது, அதன் அளவு, தடிமன் மற்றும் அது பயன்படுத்தப்படும் நோக்கத்திற்கேற்ப மாறுபடும்.

குயவனே பானையைச் சுடும் நேரத்தைத் தீர்மானிக்கிறான்.

குவளை சுடப்படும் செயல்முறையைத் தாங்கி பக்குவப்பட்டவுடன், அது அடுப்பிலிருந்து வெளியே எடுக்கப்படும்.

குயவன் பாத்திரத்தை பரிசோதிக்கிறான், பாத்திரத்தின் சத்தத்தின் மூலம் களிமண் சரியாக சுடப்பட்டிருக்கிறதா என்பதை அவன் அறிந்துகொள்வான்.
முழுமையடைந்ததும் குயவனால் அங்கீகரிக்கப்பட்டதுமான குவளை ஒரு தனித்துவமான ஒலியைக் கொண்டிருக்கும்.

நீ வடிவம் பெறுகிறாய். நீ பெறும் வடிவமும் அளவும் ஆண்டவரால் தீர்மானிக்கப்படுகிறது. நீ செய்ய வேண்டியதெல்லாம், விசுவாசித்து, ஆண்டவரை உன் இருதயத்தில் கிரியை செய்ய அனுமதிப்பதுதான்.

இறுதியில், குவளையானது குயவனால் சுடப்பட்ட பிறகு, உறுதியானதும் நீடித்து உழைக்கும் தன்மையுள்ளதுமாக மாறுகிறது. அதுபோலவே, நம் வாழ்வும் தேவனால் வடிவமைக்கப்பட்ட பிறகு, நித்திய ஜீவனுக்கு ஆயத்தமான, உறுதியான வாழ்வைப் பெறுவோம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!