தேவன் உன்னை மீட்டெடுக்க விரும்புகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் உன்னை மீட்டெடுக்க விரும்புகிறார்!

உன் வாழ்க்கை உடைந்துவிட்டது என்று நீ நினைப்பாயானால் (அல்லது உனக்குத் தெரிந்த ஒரு நபரின் வாழ்க்கை அப்படி காணப்பட்டால்) நான் உனக்கொரு நல்ல செய்தியைக் கூறுகிறேன்… இருதயங்களையும் வாழ்க்கையையும் மீட்டெடுப்பவர் தேவன்‌ ஒருவரே!

“குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்.” (வேதாகமத்தில் எரேமியா 18:4ஐ வாசித்துப் பார்க்கவும்)

எதிர்பாராத விதமாக, ஒரு பீங்கான் குவளை உன் கையிலிருந்து தவறி கீழே விழுவதாக கற்பனை செய்து பார். உன் காலடியில் சிதறிய சின்னச் சின்ன உடைந்த துண்டுகளை நீ விரக்தியுடன் பார்க்கிறாய். மீண்டும் அந்தக் குவளையில் ஒருபோதும் தண்ணீரையோ, பூக்களையோ, முன்பு இருந்ததுபோல் வைத்திருக்க முடியாது என்று தெரிந்த பின்பும், ஒட்டவைப்பதா அல்லது எல்லாத்துண்டுகளையும் அப்படியே தூக்கி குப்பையில் எறிந்துவிடுவதா, என்ன செய்வது என்று உனக்கு நீயே கேட்டுக்கொள்கிறாய்.

உன் வாழ்க்கை ஒரு பீங்கான் குவளையை விட மிகவும் மதிப்பு வாய்ந்தது. தேவனால் அதை மீண்டும் உருவாக்கவும், மீட்டெடுக்கவும் முடியும் மற்றும் அவர் ஒரு அற்புதத்தைச் செய்ய விரும்புகிறார்.
அவர் உன்னுடைய உள்ளான உணர்வுகளை குணப்படுத்த விரும்புகிறார், உன் கடந்த கால காயங்களையும், உன் கஷ்டங்களையும் குணமாக்க விரும்புகிறார். அதற்கு எவ்வளவு காலம் எடுத்தாலும், அவர் உன்னை நேசிப்பதால் இறுதிவரை செயல்படுவார்.

“குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே” என்ற இந்தப் பாடல் கூறுவதுபோல், தேவன்‌ உன்னை மீண்டும் வனைந்துகொள்ள விரும்புகிறார்.
https://youtu.be/MYB-Q0J7Y1M?si=tM0ked2-mLxtVDF-

உன்னை மீட்பதற்கு நீ தேவனுக்கு இடமளிக்க வேண்டுமானால் என்ன செய்வாய்?

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எனக்கு 2 முறை மாரடைப்பும், 2 முறை பக்கவாதமும் ஏற்பட்டது, ஒரு ஸ்டென்ட் போடப்பட்டது, மற்றும் உயிர் பிழைக்கும்படிக்கு வான்வழி பிரயாணத்தின் மூலம் டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் பட்டணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். என்னால் உதவ முடியாது என்று கூறி மருத்துவர் என்னைக் கைவிட்டுவிட்டார். நான் திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என் மருத்துவர் உள்ளே வந்து, நீ உயிரோடிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை, பெரும்பாலானவர்கள் மரித்துவிடுவார்கள் (இருதயத்தின் முக்கிய தமனியின் குருதி நாள அடைப்பு பிரச்சனை எனக்கு இருந்தது) என்று என்னிடம் சொன்னார். நான் நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு அதிசயம் என்று அவர் கூறினார்.” (ஸ்டெல்லா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!