தேவன் உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார்
முகப்பு ›› அற்புதங்கள் ››
உன் வாழ்க்கை அசாதாரணமான ஆற்றல் கொண்டது. உண்மையிலேயே இது ஒரு தெய்வீக வரம். ஒவ்வொரு நாளும் காலையில், ஆண்டவர் உனக்கு ஒரு புதிய நாளைத் தருகிறார். உன் ஒவ்வொரு மூச்சும், உன் செயல்கள் மற்றும் உன் சிந்தனைகளைக் கொண்டு நீ பூர்த்திசெய்ய வேண்டிய ஒரு வெள்ளை காகிதத் தாளை உன்னிடம் கொடுக்கிறார்.
இன்று நீ என்ன செய்யப் போகிறாய்?
- கிறிஸ்து தொடுவதுபோல… மற்றவர்களை அன்புடனும் அக்கறையுடனும் தொடு.
- ஆண்டவர் பேசுவதுபோல்… சத்தியத்தை வல்லமையுடன் பேசு.
- ஆண்டவர் நடப்பதுபோல்… பெலத்தோடும் தன்நம்பிக்கையோடும் நட.
- ஆண்டவர் நேசிப்பதுபோல்… நிபந்தனையில்லாமலும், எல்லையில்லாமலும் நேசி.
மனுஷனால் சாத்தியமற்றதாகத் தோன்றுகிறதா? சாத்தியமற்றதுபோல்தான் தோன்றுகிறது! ஆனால் பரிசுத்த ஆவியானவரால் இது சாத்தியம்!
அவர் உன்னை நிரப்புகிறார், உன்னை வழிநடத்துகிறார், உன்னிடம் பேசுகிறார், தேவையில் உள்ள ஜனங்களிடத்திற்கு நேராக உன்னை வழிநடத்துகிறார்.
இதை நம்பு: ஆண்டவர் இன்று உன்னை ஊழியத்தில் ஒரு சிறப்பு முகவராக, அதாவது, ஆசீர்வாதத்திற்கான ஒரு முகவராகப் பயன்படுத்தப் போகிறார்!
இன்று என்னுடன் சேர்ந்து ஜெபி: “ஆண்டவரே, இன்று நீர் செய்வது போலவே, நானும் தொடவும், பேசவும், நடக்கவும், நேசிக்கவும் எனக்கு உதவியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்! உம்மால் எல்லாம் கூடும். உமது மகிமைக்காக என் வாழ்க்கையை பயன்படுத்துவீராக! ஆமென்.”