தேவன் உனக்கு ஒரு எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க விரும்புகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் உனக்கு ஒரு எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க விரும்புகிறார்!

எதிர்காலம் என்னவென்று தெரியாமல், உன் வாழ்விற்குள்ளேயே ஒரு சிறைக்கைதியாய் இருப்பதுபோல உணர்கிறாயா? உனக்கு முன்பாக ஒரு உயர்ந்த மதில் தடையாக இருப்பது போல தோன்றுகிறதா? உனக்கு ஒரு நற்செய்தி கூறுகிறேன்… கர்த்தர் உனக்கு ஒரு புதிய எதிர்காலத்தையும், ஒரு புதிய தொடுவானத்தையும் கொடுக்க விரும்புகிறார்.

“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (பரிசுத்த வேதாகமத்தில் எரேமியா 29:11ஐ பார்க்கவும்)

பெரு நகரங்களில் வசிக்கும் பலர் போல, ஒருவேளை, நீ ஒரு குறுகிய முற்றத்திலோ அல்லது ஒரு சிறிய இடத்திலோ இருப்பது போன்ற சூழலில் இருக்கலாம்! கண்களை மூடும்போது மட்டும், பரந்து விரிந்திருக்கும் வானம் போன்ற விசாலமான இடத்தின் சூழலைக் காணலாம். ஆனால் உன் மாம்சீகக் கண்களால் பார்க்கும்போது, அவை அப்படித் தோற்றமளிப்பதில்லை.

நம் வாழ்விலும் கூட சில சமயங்களில் வானளவு உயர்ந்த சுவர் ஒன்று நம் முன் எழும்பி சூரியனையும் அதன் பிரகாசத்தையும் நம்மிடமிருந்து மறைப்பது போலத் தோன்றும். இந்த சுவர் நிரந்தரமாக இருந்துவிடுமோ என்ற அச்சமும் எழலாம்.

ஆனால், நல்ல தகப்பனாகிய நம் தேவன், உனக்கு மீண்டும் ஒரு எதிர்காலத்தைக் கொடுத்து, பிரகாசமான தொடுவானத்தை உன் முன் வைக்க விரும்புகிறார். என் நண்பனே/தோழியே இதை நீ நம்புகிறாயா?

நாம் சேர்ந்து ஜெபிப்போம்: “கர்த்தாவே, இன்று என் முன் வானம் மறைக்கப்பட்டதுபோலவும், நான் ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்டதுபோலவும் உணர்கிறேன். தேவனே நீர் இன்று எனக்கு உதவி செய்கிறீர் என்பதை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறேன். என் தரிசனத்தின் எல்லையை பெரிதாக்கும். எனக்கு முன்பாக பிரகாசமான புதிய தொடுவானத்தைக் காண்பித்தருளும். நான் உம்மை விசுவாசிக்கிறேன். என் முழு நம்பிக்கையையும் உம் மீது வைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

“நம்புவேன் என் இயேசு ஒருவரை” என்ற இந்தப் பாடல் (https://youtu.be/mxZHqx5XLOE) வாழ்வின் எந்த சூழலிலும் இயேசுவையே நம்ப வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் உறுதிப்படுத்துகிறது. தேவன் நமக்காக வைத்திருக்கும் புதிய தொடுவானத்தை எதிர்நோக்கி, இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தை அறிக்கையிடுவோம்!

“நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!