தேவன் உனக்கு அளிக்கும் வாழ்க்கையை நீ முழுமையாக அனுபவி!
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஒரு சிறு பிள்ளை, முதல் முறையாக ராட்டினத்தில் ஏறுதல் அல்லது ஐஸ்கிரீம் உண்ணுதல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற எதையாவது தானாக செய்வதில் வெற்றி பெறும்போது, அக்குழந்தையின் கண்கள் பிரகாசிப்பதை நீ கவனித்திருக்கிறாயா?
தங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் பார்த்து குழந்தைகள் ஆச்சரியத்தால் நிரம்பும் இயல்பு தனித்துவமானது, அவ்வாறு ஆச்சரியமடைவதில் அவர்கள் சோர்ந்துபோவதில்லை. கேள்வி என்னவென்றால்… அவர்கள் வளரும்போது என்ன நடக்கிறது? நம்மைப்போன்ற பெரியவர்கள் ஏன் அப்படி இருப்பதில்லை?
நாட்கள் செல்லச் செல்ல, அதிகாலையில் பாடும் சிறு பறவைகளின் பாட்டு, சூரிய அஸ்தமனத்தின்போது காணப்படும் பல்வேறு நிறங்கள், மழலையின் சிரிப்பொலி, ஒரு காலைப்பொழுதை சிறப்பாகத் தொடங்க உதவும் காபியின் நறுமணம் மற்றும் சுவை போன்ற அனைத்தும் நமக்குப் பழகிப் போயிற்று…
அடிக்கடி, நமது அன்றாட பொறுப்புகள் மற்றும் பல்வேறு எண்ணங்களினால் நாம் ஆக்கிரமிக்கப்பட்டு சற்று நிற்கவும், ரசிக்கவும், சுவாசிக்கும்படி மூச்சை உள்ளிழுத்து சற்று நிதானமாக வெளிவிடவும் நேரம் ஒதுக்குவதில்லை.
ஆனால், நாம் ரசிக்கவும், அனுபவிக்கவுமே இவை யாவற்றையும் தேவன் படைத்தார். சூரிய உதயத்திலிருந்து, மோதியடிக்கும் அலைகளிலிருந்து, வசந்த காலத்தில் நம் தலைக்கு மேல் பறக்கும் சிட்டுக்குருவி வரை…இவை எல்லாவற்றையும் நீ பார்த்து ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் அவர் உருவாக்கினார்!
உன்னைச் சுற்றிலும் இருக்கக்கூடிய இயற்கை அழகுகளை ரசித்து, ஆச்சரியத்தால் நிரம்புவதற்கும், காலை தோறும் புதிதான தேவ கிருபையால் நிரம்புவதற்கும், இப்பொழுதும் உன்னைச் சூழ்ந்திருக்கும் தேவ கிருபையால் நிரம்புவதற்கும் நீ மனதார முடிவு எடுக்கலாம் அல்லவா?
ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து அனுபவி… வாழ்க்கையை முழுமையாக வாழு, கர்த்தருடைய சந்தோஷத்தால் நிரப்பப்படு! நீ ஆச்சரியப்படுவதை தடைசெய்யும் எதுவும் நிர்மூலமாகட்டும்!