தேவன் உனக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் உனக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறார்!

தேவன் உனக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறார்!

நீ போகும் பாதையானது கரடுமுரடாகத் தோன்றினாலும், தேவன் உன்னை நேசிக்கிறார் என்பதையும் உனக்காக ஒரு அற்புதமான திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதையும் மறந்துவிடாதே.

கஷ்டங்கள் மற்றும் சோதனைகள் வரும்போது உன் இருதயத்தின் மனப்பான்மை எப்படிப்பட்டதாய் இருக்கிறது? நீ சீக்கிரமாக சோர்வடைந்துபோகிறாயா? பயணிக்கும் பாதை சுமுகமாக இருக்கும் என்று தேவன் ஒருபோதும் சொல்லவில்லை; இருப்பினும், அவர் நம்மை வழிநடத்தவும், தேற்றவும், மற்றும் நம்முடன் துணையாக வரவும் தம்முடைய பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளியிருக்கிறார். தேவைப்படுகையில், சரியான பாதையில் நடக்கும்படி நம் கால்களை செவ்வைபடுத்துகிறார்.

தேவன் உன்னை நேசிக்கிறார். விடாமுயற்சியுடன் இரு, பயணம் கடினமாக இருந்தாலும் அவருடைய கரத்தை விட்டுவிடாதே. நமது நண்பர்களான ஜார்ஜ் மற்றும் டெய்சியின் இந்த சாட்சிகளால் இன்று உற்சாகமடைந்து, தேவன் உன்னை நேசிக்கிறார் என்பதை அறிந்து கொள்!

“இரண்டு மாதங்களுக்கு முன்பு, 22 வருடங்களாக நான் என் வாழ்வை சிறையில் கழித்தபிறகு, என் வாழ்க்கை எப்படி அமையும் என்று நான் கவலைப்பட்டேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி தியானமானது என் கர்த்தரும் இரட்சகருமானவரை நாளுக்கு நாள் அதிகமாக விசுவாசிக்கும்படி என்னை ஊக்குவித்தது. இன்று, என் விசுவாசம் தேவன் மீது மட்டுமே உள்ளது, நான் இப்போது அவரை மிகவும் நேசிக்கிறேன். தினமும் ‘அனுதினமும் ஒரு அதிசயத்தைப்’ பெற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்… இந்த ஊழியத்திற்காக என் கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி கூறுகிறேன்.” ஜார்ஜ்

“’அனுதினமும் ஒரு அதிசயத்தை’ நான் பெறுவது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். ஒரு கழுகு உயர பறந்து செல்வதைப்போல நான் அதிகமான மாற்றத்தை அடைந்து வருகிறேன், மேலும் நான் காரியங்களை வித்தியாசமாகப் பார்க்கிறேன். எனக்கு அதிக மகிழ்ச்சி உண்டாகிறது, என் ஆத்துமா ஒரு சிறந்த இடத்தில் உள்ளது! என்னைப் புதுப்பிக்கும் மழை என் மீது பொழிவதைப்போல உணர்கிறேன்… ஆபத்தான சூழ்நிலைகளிலிலும், நான் அமைதியாக இருக்கிறேன்; உண்மையிலேயே, கர்த்தர்தான் எனக்குள் கிரியை செய்கிறார்!” டெய்சி

ஆம், இன்று, தேவன் உனக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன் மற்றும் அறிக்கையிடுகிறேன்!

சாட்சி: “எனது உறவினரான ரிக் என்பவருக்கு மீண்டும் ஜீவனைக் கொடுத்ததற்காய் நான் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவன் கோமாவில் இருந்தான், ஆனால் ஜெபத்தினால் அவன் மெதுவாக அந்த நிலையிலிருந்து வெளியேறினான், இயந்திரத்தின் உதவி இல்லாமல் சுவாசிக்கிறான். இதற்காக, கர்த்தாவே உமக்கு நன்றி, இயேசுவின் நாமத்தில் உமக்கு நன்றி சொல்லுகிறேன்.” (வில்லியம்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!